சட்டவிரோத சிறுநீரக மாற்று நடவடிக்கைகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இந்தியப் பிரஜைகள் 7 பேரையும் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கு விசாரணை இன்று (05) எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவினை நீதவான் பிறப்பித்துள்ளார்.

குற்றப்புலனாய்வு பிரிவினர் இந்திய அரசுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டுமெனவும், அதற்கான கால அவகாசம் வேண்டுமென கோரியதற்கு அமையவே சந்தேகநபர்களை  எதிர்வரும் 20 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார். 

இதேவேளை, சந்தேகநபர்கள் சார்பில் இன்று சட்டத்தரணிகள் ஆஜராகவில்லை என்பதால் அவர்களுக்கான சட்டத்தரணிகளை பெற்றுக்கொடுக்க, இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு தெரியப்படுத்துமாறு நீதவான் கிஹான் பிலப்பிட்டிய குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டார்.