தமி­ழர்­களை இன­வா­தி­க­ளா­க ஒரு­போதும் பார்க்க வேண்­டாம்:சபை முதல்வர் லக்ஷ்மன் கிரி­யெல்ல

Published By: Raam

09 Dec, 2015 | 08:31 AM
image

மஹிந்த அர­சாங்­கத்­தினால் தமிழ் மக்கள் நோக்­கப்­பட்­டது போன்று புதிய நல்­லாட்சி அர­சாங்கம் அவர்களை பார்க்­க­வில்லை. எனவே, தமிழ் மக்­களையும் தமிழ் அமைப்­பு­க­ளையும் இன­வாத கண்கொண்டு பார்க்க வேண்டாம் என்று சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான லக் ஷ்மன் கிரி­யெல்ல கோரிக்­கை­ வி­டுத்­தார்.

சர்­வ­தேச பொலிஸார் மற்றும் புல­னாய்­வுப்­பி­ரிவின் அறிக்­கைகள் பெறப்­பட்­டதன் அடிப்­ப­டை­யிலேயே புலம்­பெயர் தமிழ் அமைப்­புக்­களின் மீதான தடை நீக்கம் இடம்­பெற்­றது. இவ்­வி­ட­யத்தில் எமது அர­சாங்கம் தான்­தோன்­றித்­த­ன­மாக செயற்­பட்­டி­ருக்­க­வில்லை என்றும் அவர் குறிப்­பிட்டார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை அமர்வின் போது இடம்­பெற்ற வாய்­மூல விடைக்­கான கேள்வி நேரத்தில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் மஹிந்த ஆத­ரவு அணியின் டலஸ் அழ­கப்­பெ­ரும எம்.பி.யினால் கேட்­கப்­ப­டட கேள்­விக்குப் பதி­ல­ளிக்கும் போதே அமைச்சர் கிரி­யெல்ல மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அமைச்சர் இங்கு தொடர்ந்தும் விளக்­க­ம­ளிக்­கையில்; புலம்­பெயர் தமிழ் அமைப்­புக்­க­ளையும் புலம்­பெயர் தமி­ழர்­க­ளையும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்கம் நோக்­கிய விதம் வேறா­கவும் ஐக்­கிய தேசியக் கட்சி சார்ந்த நல்­லாட்சி அர­சாங்கம் பார்க்­கின்ற விதம் வேறா­கவும் இருக்­கின்­றன.

தமி­ழர்­க­ளையும் தமிழ் அமைப்­புக்­க­ளையும் இன­வாதக் கண்­கொண்டு பார்க்­க­வேண்டாம். நாம் அவ்­வாறு பார்ப்­பது கிடை­யாது. இன்­டர்போல் எனப்­ப­டு­கின்ற சர்­வ­தேச பொலி­ஸா­ரி­னதும் புல­னாய்வுப் பிரி­வி­ன­ரி­னதும் உதவி ஒத்­து­ழைப்­புக்­களை நாடி அவர்­க­ளது அறிக்­கை­களின் பிர­கா­ரமே நாம் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டோம். அத்­துடன் 8 புலம் பெயர் அமைப்­புகள் மீதான தடை­க­ளையும் நீக்­கினோம்.

இவ்­வி­ட­யத்தில் அர­சாங்கம் தான்­தோன்­றித்­த­ன­மாக செயற்­ப­ட­வில்லை என்­பதைத் தெரி­வித்துக் கொள்­கிறேன்.

ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெ­று­வ­தற்கு ஆறு­மா­தங்­க­ளுக்கு முன்­ப­தாக வடக்­கிற்கு எந்த தமி­ழரும் செல்­ல­மு­டி­யா­த­வாறு முன்­னய அர­சாங்கம் தடை விதித்­தது. வெளி­நா­டு­களில் இருந்து வரும் உற­வுகள் வடக்­கிற்குச் செல்ல முடி­யாது தடை செய்­யப்­பட்­டனர். தேர்­தலை இலக்­கு­வைத்து அன்று சூழ்ச்­சி­க­ர­மான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. எனினும் எமது அர­சாங்கம் அதனைத் தகர்த்­தெ­றிந்­தது என்றார்.

ருவான்

இதே­வேளை பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜே­வர்த்­தன உரை­யாற்­று­கை­யி­லே­யே புலம்­பெயர் தமிழர் அமைப்­புக்­களின் மீதான தடை­நீக்கம் மற்றும் நபர்கள் மீதான தடை நீக்கம் தொடர்பில் நாம் உயர் மட்டக் குழு­வொன்றை அமைத்து அதன் பிர­கா­ரமே நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டோம்.

வெளி­வி­வ­கார அமைச்­சரை தலை­மை­யாகக் கொண்ட இக்­கு­ழுவில் பாது­காப்பு அமைச்சின் செய­லாளர், படைப்­பி­ரி­வு­களின் பிர­தா­னிகள் என முக்­கி­யஸ்­தர்கள் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

மேலும் மேற்படி அமைப்புக்கள் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக எந்தவொரு பயங்கரவாத அமைப்புடனும் தொடர்புகளைப் பேணியிருக்கவில்லை. நிதிகளை வழங்கியிருக்கவில்லை என்ற தகவல்களின் அடிப்படையிலேயே நாம் 8 புலம்பெயர் அமைப்புக்களின் தடையை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்தோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22