(இராஜதுரை  ஹஷான்)

 ஜனாதிபதி  கோத்தாபய ராஜபகக்ஷ  தலைமையிலான  புதிய அரசாங்கத்தில் அரச ஊழியர்களுக்கு   வழங்கப்பட   வேண்டிய சலுகைகள் மற்றும் உரிமைகள்  நிபந்தனைகளற்ற விதத்தில் வழங்கப்படும்..    

பட்டதாரிகள் அனைவருக்கும் தொழில் வாய்ப்பு , 1 இலட்சம்பேருக்கு தொழில் வாய்ப்பு ஆகிய  வாக்குறுதிகள் புதிய அரசாங்கத்தில்   நிச்சயம்  நிறைவேற்றப்படும் என  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  வாக்குறுதி  வழங்கினார்.

 மஹரகம  பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற   பொதுஜன பெரமுன வேட்பாளரது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு  கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எமது ஆட்சியிலேயே  அரச ஊழியர்கள்    அதிக பயன்  பெற்றுள்ளார்கள்.  1977ம் ஆண்டு   தொடக்கம் 2005ம்    ஆண்டு ஆட்சியில்    இருந்த எந்த அரசாங்கமும் அரச ஊழியர்களுக்கு அவர்களின் உரிமைகளை    பெற்றுக் கொடுக்கவில்லை.   இக்காலக்கட்டத்தில் அரச வளங்கள்,    அரச நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டன.

அரச ஊழியர்களின் ஆதரவுடன் 30 வருட கால  சிவில் யுத்தத்தை   முடிவுக்கு கொண்டு வந்தோம்.     அதே போன்றே     அவர்களின்  ஆதரவுடன் கொவிட் -19 வைரஸ்  தாக்கத்தையும் கட்டுப்பாட்டுக்குள்  கொண்டு வந்தோம்.     6  இலட்சம் அரச  ஊழியர்களின் எண்ணிக்கையை 15 இலட்சமாக உயர்த்தி தனியார் சேவையை கட்டிலும். அரச சேவையினை  பலப்படுத்தினோம். 

ஆகவே    ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில்  அரச ஊழியர்களுக்கு   வழங்கப்பட வேண்டிய   உரிமைகள்  நிபந்தனைகளற்ற  விதத்தில் வழங்கப்படும்.

அனைத்து    பட்டதாரிகளுக்கும், 1 இலட்சம் பேருக்கு அரச    தொழில்களையும் வழங்குவதற்கான நடவடிக்கைகள்; முன்னெடுக்கப்பட்டன. தேர்தல் காரணமாக  அப்பணிகள்  தற்காலிகமாக இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன. ஆகவே  பொதுஜன பெரமுன  தலைமையிலான அரசாங்கத்தில்  இந்த வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும். என்றார்.