வடக்கில் செயற்படும் படையினர், புலனாய்வாளர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டு: ரமேஷ் பத்திரண

Published By: J.G.Stephan

12 Jul, 2020 | 03:46 PM
image

(ஆர்.ராம்)
வடமாகாணத்தில் தேர்தல் பிரசாரங்களில் படையினர் ஈடுபடுகின்றனர் என்பதும், படையினர் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தேர்தல் செயற்பாடுகளில் தலையீடுகளைச் செய்கின்றது என்றும் முன்வைக்கப்படும்  குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பான அப்பட்டமான பொய்யாகும் என்று அமைச்சரவைப் பேச்சாளார் அமைச்சர் வைத்தியர். ரமேஷ் பத்திரண தெரிவித்தார். 

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வடக்கில் தமிழ்த் தேசியக் கட்சிகள் முன்னெடுத்து வரும் தேர்தல் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்தும் வகையிலும், மக்களை அச்சுறுத்தும் வகையிலும் படையினரும், புலனாய்வாளர்களும் செயற்பட்டு வருவதாக அக்கட்சிகள் சிலவற்றின் தலைவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர். 

அதுமட்டுமன்றி, வழமைக்கு மாறாக முக்கிய வீதிகளில் விசேட சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தற்போது அவை நிரந்தரமாக்கப்பட்டு பொதுமக்கள், வேட்பாளர்களை இலக்கு வைத்து சோதனைகள் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிட்டனர். 

அதேநேரம், தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான பேராசிரியர் ரட்ணஜீவனும், தேர்தல் வாக்கெடுப்பிற்கு முன்னதாகவே வடக்கில் படையினரின் பிரசன்னம் அதிகரித்துள்ளதாக சுட்க்காட்டி கவலை வெளியிட்டுள்ளார். 

இந்நிலையில் இவ்விடயங்கள் தொடர்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர்.ரமேஷ்பத்திரணவிடம் வினவியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

வடக்கு மகாணத்தில் படையினர், புலனாய்வாளர்கள் எவ்விதமான முறையற்ற செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை. தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுகின்றார்கள், தேர்தல் செயற்பாடுகளுக்கு குந்தகம் விளைவிக்கின்றார்கள் என்று கூறுவது அப்பட்டமான பொய்யாகும். 

தற்போதைய சூழலில் வடக்கு கிழக்கு உட்பட நாடாளவிய ரீதியில் சட்ட விரோத செயற்பாடுகளை முழுமையாக கட்டப்படுத்துவதை இலக்காக கொண்டு சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டள்ளன. அதனை அடிப்படையாக் கொண்டே விசேட சோதனை சாவடிகளும், ரோந்து நடவடிக்கைளும் முன்னெடுக்கப்படுகின்றன. 

இந்த செயற்பாடுகள் வடக்கு மாகாணத்தில் மட்டுமல்ல தென் மாகாணத்திலும் காணப்படுகின்றது. 

மிக முக்கியமாக வடக்கில் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. சமுக விரோத குற்றச்செயல்களை கட்டப்படுத்தவேண்டியுள்ளது. அந்த செயற்பாடுகளில் பொலிஸாருடன் இணைந்து படையினரும் ஒத்துழைப்புக்களை வழங்குகின்றார்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58