ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா!

Published By: Vishnu

13 Jul, 2020 | 09:38 AM
image

நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரின் மகள் ஆரத்யாவும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

முன்னதாக, அமிதாப் மற்றும் அபிஷேக் ஆகியோர் கோவிட் -19 க்கு சாதகமாக சோதனை செய்யப்பட்டனர். வைரஸ் பாதிப்புக்குள்ளான அவர்கள் தற்போது மும்பையின் நானாவதி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமிதாப், அபிஷேக் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்த பிறகு அவர்கள் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. 

பரிசோதனையில் ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அவரின் மகள் ஆராத்யாவுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

ஐஸ்வர்யா ராய்க்கும், ஆராத்யாவுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது குறித்து அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை மாலை, ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மாமியார் ஜெயா பச்சன் இருவரும் கொரோனா தொற்று சோதனைக்கு உட்படுத்தப்படடனர்.அதில் அவர்கள் கொரோனா வைரஸுக்கு எதிர்மறையாக அறிவிக்கப்பட்டனர். 

எனினும் இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளிலேயே ஐஸ்வர்யா ராயும், அவரது மகளும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கத்தோலிக்க திருச்சபையை சீர்திருத்தும் மூன்று வருட...

2025-03-17 15:27:25
news-image

ஹமாஸிற்கு ஆதரவளித்ததால் விசா ரத்து: அமெரிக்காவில்...

2025-03-17 13:09:43
news-image

வொய்ஸ் ஒவ் அமெரிக்காவை மூடுவதற்கு டிரம்ப்...

2025-03-17 11:06:21
news-image

மத்திய பிரதேச மருத்துவமனையில் தீவிபத்து: 190...

2025-03-17 10:27:51
news-image

வடக்கு மசெடோனியாவில் இரவு விடுதியில் தீ...

2025-03-16 14:34:32
news-image

பலநாடுகளிற்கு எதிராக போக்குவரத்து தடை -...

2025-03-16 12:43:01
news-image

“உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது...

2025-03-16 11:53:38
news-image

பத்திரிகையாளர்கள் நிவாரண பணியாளர்கள் மீது இஸ்ரேல்...

2025-03-16 10:47:17
news-image

ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது அமெரிக்கா...

2025-03-16 07:38:57
news-image

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் வீடியோ...

2025-03-15 12:07:55
news-image

பங்களாதேஷில் 8 வயது சிறுமி பாலியல்...

2025-03-14 15:44:10
news-image

பனாமா கால்வாயை முழுமையான கட்டுப்பாட்டின் கீழ்...

2025-03-14 14:33:13