அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானோரின் எண்ணிக்கை 28 இலட்சத்தையும் கடந்துவிட்டதாகவும், சுமார் ஒரு இலட்சத்து 30 ஆயிரம்பேர் குணமடைந்துவிட்டதாகவும் அறிவிக்கப்பட்ட ஜுலை 6 ஆம் திகதி உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்புரிமையிலிருந்து விலகிக்கொள்ளும் அதன் நோக்கத்தை அமெரிக்கா உத்தியோகபூர்வமாக ஐக்கிய நாடுகள் சபைக்கு அறிவித்தது. ஏற்கனவே அந்த நிறுவனத்திற்கு நிதியுதவியளிப்பதை நிறுத்தப்போவதாகவும், அதிலிருந்து விலகப்போவதாகவும் மே 29 இல் ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்த பிறகு இப்போது இந்த அறிவிப்பைச் செய்திருக்கிறார்.
உலக சுகாதார ஸ்தாபனம் சீனாவிற்கு சார்பாக செயற்படுகிறது என்று பல தடவைகள் ஏற்கனவே குற்றஞ்சாட்டிய ஜனாதிபதி ட்ரம்ப் கொவிட் வைரஸ் நெருக்கடியை முற்றிலும் தவறான முறையில் கையாண்டதாகத் தன்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்காக மேற்கொண்டிருக்கும் மேலும் ஒரு முயற்சியாகவே இந்த நிகழ்வுபோக்கு அமைகிறது.
சீனாவிடமிருந்து சுயாதீனமானதாகச் செயற்படவில்லை என்றும், கொவிட் - 19 அச்சுறுத்தல் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதில் தாமதமாக செயற்பட்டதாகவும் வைரஸ் தொடர்பில் தவறான அல்லது பிழையாக வழிநடத்தக்கூடிய தகவல்களை அடிக்கடி வெளியிட்டதாகவும் உலக சுகாதார ஸ்தாபனத்தை அடிக்கடி குற்றஞ்சாட்டிய ட்ரம்ப், '30 நாட்களுக்குள் மிகவும் கணிசமான முன்னேற்றங்களை" காண்பிக்க வேண்டுமென்று உத்தியோகபூர்வமாகக் கோரிக்கைவிடுத்து மே 18 இல் கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.
அமெரிக்க காங்கிரஸின் அங்கீகாரம் இல்லாமல் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாலும், அடுத்த வருடம் ஜுலை 6 ஆம் திகதி மாத்திரமே வெளியேறும் முடிவு நடைமுறைக்கு வரும் என்பதாலும் காங்கிரஸோ அல்லது நீதிமன்றங்களோ வாபஸ் முடிவை மாற்றியமைக்கக்கூடிய சாத்தியங்கள் இருக்கிறது. வெள்ளை மாளிகையில் இரண்டாவது பதவிக்காலத்திற்காகப் போட்டியிடும் ட்ரம்பிற்கு எதிராக ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகக் களமிறங்கியிருக்கும் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன், தான் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டால் உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து வெளியேறும் முடிவை இரத்துச்செய்யப்போவதாக ஏற்கனவே அறிவித்திருக்கிறார். வாபஸாகும் முடிவை நிராகரிக்குமாறு கல்விமான்களிடம் இருந்தும், மருத்துவ சங்கங்களிடம் இருந்தும் காங்கிரஸ{க்கு நெருக்குதல்கள் ஏற்கனவே வந்துகொண்டிருப்பது ஒன்றும் ஆச்சரியப்படக்கூடியதல்ல.
உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து விலகுவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஏறுமாறான தீர்மானம் உலகப் பொதுச்சுகாதாரத்திற்குப் பாரதூரமான விளைவுகளைக் கொண்டுவரும். அமெரிக்கா வாபஸாகுவது சுகாதார ஸ்தாபனத்திற்கும் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தும். அமெரிக்காவிடமிருந்து கிடைக்கக்கூடிய தொழில்நுட்ப நிபுணத்துவத்தை அந்த நிறுவனம் இழக்கவேண்டியிருக்கும். அத்துடன் நிதி போதாமையினால் நெருக்கடிக்குள்ளாக வேண்டியுமிருக்கும். ட்ரம்ப் முன்னர் வெளியிட்ட தகவலின்படி அமெரிக்கா உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு 45 கோடி டொலர்களை வருடாந்தம் வழங்கிவந்திருக்கிறது.
கொவிட் - 19 தொற்றுநோய் உலக சுகாதார ஸ்தாபனத்தில் பல குறைபாடுகளையும், பலவீனங்களையும் முன்னரங்கத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது. உதாரணமாக சர்வதேச சுகாதார ஒழுங்குவிதிகளில் 2005 இல் செய்யப்பட்ட திருத்தங்கள் ஒரு சர்வதேசப் பொதுச்சுகாதார நெருக்கடியாக அமையக்கூடிய சகல நிகழ்வுகளையும் உலகநாடுகள் உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அறிவிப்பதையும், அத்தகைய நிகழ்வுகள் தொடர்பிலான தகவல்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கான வேண்டுகோள்களுக்குப் பதிலளிப்பதையும் கட்டாயமாக்கின. ஆனாலும் உறுப்பு நாடுகள் அந்தத் திருத்தங்களை முறையாகப் பின்பற்றுவதையும் சுயாதீனமாக உறுதிப்படுத்துவதில் உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு மட்டுப்பாடு இருக்கிறது.
2005 திருத்தங்களைக் கொண்டுவருவதில் அமெரிக்காவே பிரதானமாக சம்பந்தப்பட்டிருந்தால் உலக சுகாதார ஸ்தாபனத்தைப் பலப்படுத்துவதில் இப்போது அமெரிக்கா எந்தப் பங்கையும் வகிப்பதற்கில்லை. சளிக்காய்ச்சல் தடுப்பு மருந்தைத் தயாரிப்பதற்கு வைரஸ் கூறுகளைப் பயன்படுத்துவது குறித்துத் தீர்மானிப்பதற்கான உயர் கட்டமைப்பில் வாஷிங்டன் ஒரு ஆசனத்தை இழக்கும் என்பதுடன், புதிய சளிக்காய்ச்சல் வைரஸ் மாதிரிகளைப் பெறுவதற்கான வாய்ப்பும் இருக்காது. 2018 - 2019 அமெரிக்காவில் இந்த சளிக்காய்ச்சல் 34,000 இற்கும் அதிகமானோரைப் பலியெடுத்தது.
வூஹானுக்கு விஜயம் மேற்கொண்டு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்த குழுக்களில் பங்கேற்றது போன்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் முக்கிய பணிகளில் அமெரிக்க விஞ்ஞானிகள் இனிமேலும் இருக்கப்போவதில்லை என்பதால் சுகாதாரப் புலனாய்வுத் தகவல்களைப் பெறமுடியாத நிலையும் அமெரிக்காவிற்கு ஏற்படும். அதனால் சர்வதேச ரீதியில் பரவக்கூடிய நோய்களுக்கு எததிரான போராட்டத்தில் அமெரிக்காவின் பங்கேற்புக்குப் பாதிப்பு ஏற்படும். இறுதியாக உலக சுகாதார ஸ்தாபனத்தை மேலும் பலவீனப்படுத்துவதிலிருந்து எவரும் பயனடையப்போவதில்லை. (த இந்து)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM