ஆப்கானிஸ்தானின் வடக்கு மாகாணமான பாக்லானில் தலிபான் போராளிகளுடன் நடந்த ஆயுத மோதலில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் இந்த மோதலில் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் ஆப்கானிஸ்தானின் டோலோ செய்திச் சேவை ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. 

இந்த தாக்குதல் சம்பவமானது பாக்லான் மற்றும் சமங்கன் மாணங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலையில் உள்ள செஷ்மய் ஷீர் மற்றும் பாக்-இ-ஷமல் பகுதிகளில் இடம்பெற்றுள்ளது.

இதனால் நெடுஞ்சாலை பல மணிநேரங்களுக்கு போக்குவரத்துக்கு மூடப்பட்டது மற்றும் நான்கு ஆப்கானிய படைகளின் வானங்களும் மோதலில் சோதமடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.