சீனாவில் உள்ள தன் நாட்டுப் பிரஜைகளை அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

சீனாவில் தடுப்புக் காவல் மற்றும் அங்கிருந்து வெளியேறுவதற்கான தடை உள்ளிட்ட தன்னிச்சையான சட்ட அமுலாக்க ஆபத்து காரணமாகவே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டும் உள்ளதாக சீனாவில் உள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

சீன அரசாங்கத்தை விமர்சிக்கும் தனியார் மின்னணு செய்திகளை அனுப்பியதற்காக அமெரிக்க குடிமக்களை பாதுகாப்புப் பணியாளர்கள் தடுத்து வைக்கலாம் மற்றும் நாடுகடத்தலாம் என்று குறிப்பிட்ட எடுத்துக்காட்டுகளை மேற்கோள் காட்டாமல் இந்த அறிவித்தலை அமெரிக்க வெளியுறுவுத்துறை வழங்கியுள்ளது.

மாறாக COVID-19 தொற்றுநோய், வர்த்தகம், புதிய ஹாங்காங் பாதுகாப்புச் சட்டம் மற்றும் ஜின்ஜியாங் பிராந்தியத்தில் உய்குர் மக்கள் எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் வரையிலான பிரச்சினைகள் குறித்து இருதரப்பு பதற்றங்கள் தீவிரமடைவதால் இந்த பாதுகாப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா எடுத்துக் காட்டியுள்ளது.

சீனாவும், அமெரிக்காவும் அண்மையில் இரு நாடுகளுக்கிடையே விசாத் தடைகளை பறிமாறிக் கொண்டன. இது மோசமடைந்து வரும் இரு நாடுகளுக்கிடையிலான உறவினை அடிக் கோட்டிட்டுக் காட்டுவதாக அமைந்துள்ளது.