முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நாட்டின் பொரளாதாரம் தொடர்பில் விவாதிப்பதற்கு வருமாறு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று (25) காலை தொடலங்க ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் முகமாகவே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும்  தெரிவிக்கையில், நாட்டின் கடன் சுமை காரணமாகவே வரி அதிகரித்துள்ளது. கடன் சுமை குறையும் பட்சத்தில்  நாட்டில் அதிகரிக்கப்பட்டிருக்கும் வரிகள் நீக்கப்படும் என அவர் தெரிவித்தார்.