இந்துக்கோவில்களை பாதுகாக்க மோடியை தலையிடுமாறு காணாமல் போனோரின் உறவுகள் கோரிக்கை

11 Jul, 2020 | 10:21 PM
image

இந்துக்கோவில்களையும், தமிழர்களையும் காப்பாற்ற இந்திய பிரதமர் மோடி  உடனடியாக தலையிட வேண்டும். என்று வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் இடத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்துகருத்து தெரிவித்த அவர்கள்,

பௌத்த அடிப்படை வாதமே காணாமல் ஆக்கப்பட்டதற்கும், அவர்களை கண்டு பிடிப்பதற்கும் தடையாக உள்ளது. இந்து கோவில்கள் சிங்கள பௌத்த மத பிக்குகளால் நீண்ட காலமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றது. சமீபத்தில், வரலாற்று கோயில்கள் புத்த மதத்திற்கு சொந்தமானவை என தெரிவித்த தேரர்களின் கருத்து எம்மை எல்லாம் அச்சமடைய செய்துள்ளது.

திருக்கோணேச்சரம் கோவில். இலங்கையில் உள்ள இரண்டு தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்று கிபி 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் இக்கோயிலின் மீது ஒரு பதிகம் பாடியது குறிப்பிடத்தக்கது. 

இப்போது சிங்கள பௌத்த பிக்குகள்  கிழக்கு மாகாணத்தில் 25 கோயில்கள் புத்த மதத்தை சேர்ந்தவை என்று தெரிவித்து புத்த கோவிலை கட்டுவதற்கு முயற்சிப்பதாக  இந்துக்கள் பயப்பிடுகிறார்கள். புதிய சிங்கள அரசாங்கம் ஒரு குழுவை உருவாக்கி, கிழக்கு மாகாண தொல்பொருள் பாரம்பரியத்தை பாதுகாத்தல் என்று கூறி, இந்து கோவில்களை கைப்பற்ற முயற்சி செய்வதுடன் நிலங்களைத் தோண்டி, அதனுள் சில பழைய புத்த சின்னங்களை வைக்கின்றன. 

பின்னர் தங்களின் வரலாற்று பௌத்த இடம் என்று கூறி , இலங்கை இராணுவத்தை அனுப்புவதன் மூலம் அந்த இடங்களை  பாதுகாக்கிறார்கள், இறுதியில் ஒரு புத்த கோவிலை கட்டி  சிங்கள மக்களை குடி ஏற்றுகிறார்கள்.

இதை நாம் இனப்படுகொலை என்று அழைக்கிறோம். 

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் இந்து மதத்தைப் பாதுகாப்பது பிரதமர் மோடியின் கடமையாகும்.ஸஇந்திய காங்கிரஸ் கட்சி எந்தவொரு அரசியல் தீர்வும் இல்லாமல் தமிழர்களை பலவீனப்படுத்தி, 2009 ல் நமது பாதுகாவலர்களை அழிக்க ஒரு பச்சை விளக்கு .மோடி இலங்கைக்கு வந்த போது கூட்டுறவு மற்றும் கூட்டாட்சிக்கு உறுதியளித்ததுடன் அதனை பரிந்துரைத்திருந்தார். அதை அமுல்படுத்துவதற்கு முன்னர் அது தொடர்பாக விளக்கமளிக்க இந்திய அரசியலமைப்பு அறிஞர்களின் ஆரம்ப குழுவை அனுப்புவதற்கு எதுவும் செய்யப்படவில்லை. நாம் அதனை மிக விரைவில் செய்யும்படி கேக்கிறோம்.

இந்தியாவால் திணிக்கப்பட்ட அரசமைப்பின் 13 ஆவது திருத்த சட்டத்தை ஏற்க முடியாது. அது இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்று ராவண பலய அமைப்பின் பொதுச்செயலர் சத்தாதிஸ்ஸ தேரர் வலியுறுத்தியுள்ளார் இது இந்தியாவின் வல்லமையை இழிவு படுத்துவதாகும்.

இலங்கையின் வடகிழக்கில் உள்ள பண்டைய இந்து நாகரிகத்தையும், கோவில்களையும்  பாதுகாப்பது இந்து நாடு என்ற வகையில் இந்தியாவின் கடமையாகும்.இது இந்தியாவினால் செய்ய முடியும்.1987 இல் இந்தியா இங்கு வந்து 13ம்திருத்த சட்டத்தின் மூலம்  வட கிழக்கை இணைத்து  இது ஒரு தமிழர் தேசம் என்று அங்கிகரித்தமை குறிப்பிடத்தக்கது.

சுமந்திரன் புத்த மதத்திற்கு முதன்மையான இடத்தை கொடுத்ததும், இலங்கை ஒரு பௌத்த நாடுஎன்று  இந்தியாவில் வைத்து சம்பந்தன் கூறியமையே இவை யாவற்றுக்கும் காரணம் என்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

67,000 குடும்பங்களுக்கு குடிநீர்; இலங்கையின் இரண்டாவது...

2026-07-10 19:26:46
news-image

ஹவ்லொக் பகுதியில் துப்பாக்கி மீட்பு சம்பவம்:...

2026-07-10 18:54:56
news-image

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா?...

2026-07-10 17:52:32
news-image

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள்...

2026-07-10 18:07:24
news-image

பொரளை மெகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையே...

2026-07-10 17:36:54
news-image

143 களஞ்சியசாலைகளில் திங்கள் முதல் நெல்...

2026-07-10 19:13:12
news-image

சமல் ராஜபக்ஷவின் நிறுவனத்தால் அரசுக்கு 3.5...

2026-07-10 18:00:12
news-image

களனி கங்கையைப் பாதுகாப்பதற்கு வீடமைப்பு மற்றும்...

2026-07-10 16:52:31
news-image

சிறைச்சாலையில் மோதல் : அமைச்சரின் திட்டமிடல்...

2026-07-10 16:51:57
news-image

நாமல் ராஜபக்ஷ ‘ஏ – டீம்...

2026-07-10 16:51:18
news-image

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களைப் பிரித்து பேராதனை வைத்தியர்கள்...

2026-07-10 16:39:41
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறைக்கு நீதியும் பொறுப்புக்கூறலும்...

2026-07-10 16:29:24