ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் -சுதந்திர ஊடக இயக்கம்

11 Jul, 2020 | 07:18 PM
image

(நா.தனுஜா)

பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ கொழும்பு மேல்நீதிமன்ற வளாகத்தில்வைத்து நேற்று வெள்ளிக்கிழமை தனது கடமையில் ஈடுபட்டிருந்த புகைப்பட ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டமைக்குக் கடும் கண்டனத்தை வெளியிட்டிருக்கும் சுதந்திர ஊடக இயக்கம், இதுதொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ கொழும்பு மேல்நீதிமன்ற வளாகத்தில்வைத்து நேற்று வெள்ளிக்கிழமை தனது கடமையில் ஈடுபட்டிருந்த புகைப்பட ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்தியதுடன், அவரது சட்டையில் பிடித்து நீதிமன்ற வளாகத்திலுள்ள பொலிஸ் காவலரண் வரையில் இழுத்துச்சென்ற சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக சுதந்திர ஊடக இயக்கத்தினால் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

கொழும்பு மேல்நீதிமன்ற வளாகத்தில் தனது கடமையில் ஈடுபட்டிருந்த புகைப்பட ஊடகவியலாளர் அகில ஜயவர்தனவிற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும், அச்சுறுத்தும் வகையிலும் செயற்பட்ட பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவவின் செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரியும், வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலைகளின் முதலாவது சந்தேகநபருமான நியோமால் ரங்கஜீவ, அவருக்கெதிரான வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு சமுகமளித்தபோது அவரைப் புகைப்படம் எடுத்தமைக்காக தன்னை ரங்கஜீவ அச்சுறுத்தியதாக அகில ஜயவர்தன தெரிவித்திருக்கிறார். அவரிடம் தனது ஊடகவியலாளர் அடையாள அட்டையைக் காண்பிக்க முற்பட்ட போதிலும், அவர் அதனை முற்றாகப் புறக்கணித்ததாகவும் நீதிமன்ற வளாகத்திலுள்ள பொலிஸ் காவலரண் வரை இழுத்துச்சென்று தனது சிப்பை பறிக்க முற்பட்டதாகவும் ஜயவர்தன குறிப்பிட்டிருக்கிறார்.

சமூகத்தில் இடம்பெறும் விடயங்கள் தொடர்பில் மக்கள் அறிந்துகொள்வதுடன், அவைபற்றி ஆராய்வது ஜனநாயகத்தின் பாதுகாப்பிற்கு அவசியமானதாகும். தொழில்முறை ஊடகவியலாளர்கள் செய்திகளை வழங்குவதன் ஊடாகவே மக்களால் இந்த உரிமையை அனுபவிக்கமுடிகிறது. எனினும் அண்மைக்காலங்களில் ஊடகவியலாளர்கள் அவர்களது தொழிலில் ஈடுபடுவதற்கான இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டு வருவதுடன், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் நீதிமன்றக் கட்டமைப்பிற்குள் இத்தகைய சம்பவம் இடம்பெற்றுள்ளமையானது நாட்டுமக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான பாரிய சவாலாகும்.

இந்நிலையில் தனக்கு எதிரான வழக்கு விசாரணையொன்றுக்காக வருகைதந்திருந்த ரங்கஜீவவினால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாட்டைக் கடுமையாகக் கண்டனம் செய்யும் அதேவேளை, இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தகவல்களை அறிந்துகொள்வதற்கான மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 15:50:37
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56