இலங்கையில் மோட்டார் வாகனங்கள் துறையில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான Diesel & Motor Engineering (DIMO) PLC, விவசாயத் துறையில் தனது தொழிற்பாடுகளை விஸ்தரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் இத்தொழிற்துறையில் “DIMO Agri” என்று புதியதொரு அடையாளத்தை தோற்றுவிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.
DIMO Agri இயந்திரவியல் பிரிவானது Mahindra டிராக்டர் , CLASS அறுவடை இயந்திரங்கள் போன்ற உலகின் மிகச் சிறந்த விவசாயத் துறை சார்ந்த வர்த்தகநாமங்களை இலங்கைக்கு தருவிப்பதுடன், இரு தசாப்தங்களுக்கும் மேலாக உள்நாட்டு விவசாயத் துறையில் இயந்திரமயமாக்கத்திற்கு உதவி வருகின்றது.
சர்வதேச அரங்கில் நிகழுகின்ற தொழில்நுட்பரீதியான மேம்பாடுகள், மக்களின் விருப்பத் தெரிவுகளுடன் இணைந்து, ஆரோக்கியமான மற்றும் சேதனரீதியாக பயிரிடப்பட்ட உணவுகள், உள்நாட்டு விவசாயத் துறையில் ஏராளமான வாய்ப்புக்களைத் தோற்றுவித்துள்ளது.
DIMO இந்த வாய்ப்புக்களை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தி வருகின்றது. “DIMO Agri” என்ற புதிய அடையாளமானது இந்த முயற்சிக்கு அணுசரனையளிப்பதுடன், மிகவும் போட்டித்திறன் காணப்படுகின்ற இத்துறை சார்ந்த வியாபாரச்சூழலில் தனது தொழிற்பாடுகளை முற்றிலும் தனித்துவமாக வேறுபடுத்தும் முயற்சிக்கும் உதவும். இது தொடர்பாக நிறுவனத்தின் பயணத்தின் முதற்படியின் ஒரு அங்கமாக DIMO Agri இலச்சினை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
DIMO நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான ரஞ்சித் பண்டிதகே குறிப்பிடுகையில்,
“DIMO Agri பிரிவானது 2015/16 ஆம் ஆண்டில் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியுள்ளது. DIMO போன்ற பெரும் இலட்சியத்தைக் கொண்டுள்ள நிறுவனம் ஒன்று உள்நாட்டு விவசாயத் துறையில் வேறுபட்ட பிரிவுகளுக்கு விஸ்தரிப்பை மேற்கொள்வது மிகவும் முக்கியமாகும்.
DIMO Agri இலச்சினையின் அறிமுகமானது விஸ்தரிப்பு முயற்சி தொடர்பான முன்னெடுப்புக்களின் ஒரு அங்கமாக அமைந்துள்ளதுடன், தொழில்நுட்பரீதியாக புதிய தலைமுறை விவசாய அடிப்படையிலான உற்பத்திகள் மற்றும் சேவைகளை தொழிற்துறை அனுபவிப்பதற்கும் இது இடமளிக்கும்.”
DIMO Agri இயந்திரவியல் பிரிவின் உதவிப் பொது முகாமையாளரான கிஹான் பெர்னாண்டோ குறிப்பிடுகையில்,
“புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இலச்சினை, சந்தையில் எமது தொழிற்பாடுகளுக்கு மீள்வரைவிலக்கணம் கொடுப்பதுடன், பெறுமதியைச் சேர்ப்பித்து, எமது வியாபாரத்தை தனித்துவமானதாக மாற்றியமைக்க எமக்கு உதவும். தற்சமயம் நாம் விவசாயத் துறையில் பல்வேறுபட்ட பிரிவுகளுக்கும் எமது தொழிற்பாடுகளை விஸ்தரிக்க திட்டமிட்டுள்ளதுடன், விவசாய இயந்திரவியல் துறையிலும் தொடர்ந்து எமது தொழிற்பாடுகளை முன்னெடுப்போம்.
புதிதாக நாம் அறிமுகப்படுத்தியுள்ள இலச்சினையில் உள்ளதைப் போலவே, எமது தற்போதைய மற்றும் எதிர்கால வியாபார நடவடிக்கைகள் அனைத்தும், தொழில்நுட்பரீதியாக அடுத்த தலைமுறை விவசாயத்துடன் ஒன்றியதாக அமையும். இது உள்நாட்டு விவசாயத் துறைக்கு எதிர்காலத்திற்கான உற்பத்திகளையும், தீர்வுகளையும் வழங்குவதற்கு எமக்கு இடமளிக்கும்.”
DIMO Agri இலச்சினையை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வில், அடுத்த தலைமுறை விவசாயம் என்ற தனது குறிக்கோளுக்கு அடையாளமாக பல்வேறு புதிய உற்பத்திகளையும் நிறுவனம் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. CLAAS Crop Tiger 40 (CT 40) என்ற புதிய அறுவடை இயந்திரம், விவசாயிகள் தானியங்களின் தரத்தை அதிகரித்துக் கொள்ள இடமளிப்பதுடன், ஈரலிப்பான நெல் வயல்களில் உபயோகிப்பதற்கு இறப்பரினாலான தட்டுக்களையும் கொண்டுள்ளது.
இது காற்றழுத்தி ஒன்றைக் கொண்டுள்ளதால் பேணிப் பராமரிப்பது மிகவும் இலகுவானது. புதிய CT 40 அறுவடை இயந்திரமானது உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவுவதுடன் அதிகமான ஏக்கர் விளைநிலத்தை அறுவடை செய்யும் வலுவையும் கொண்டுள்ளது.
CLAAS அறுவடை இயந்திரங்கள் அனைத்தும் ஜேர்மனிய தொழில்நுட்பத்தின் கீழ் வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளதுடன் DIMO நிறுவனத்தின் மிகச் சிறந்த விற்பனைக்குப் பின்னரான சேவையின் பக்கபலத்தையும் கொண்டுள்ளன.
DIMO Agri தனது உற்பத்தி வரிசையை மேம்படுத்தும் வகையில் சிறு அளவில் மரக்கறி செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை இலக்காகக் கொண்டு அதனது Garuda விவசாய உபகரணங்கள் உற்பத்தி வரிசையையும் அறிமுகப்படுத்தி வைத்துள்ளது.
“Baby Weeder, Micro Weeder, Mini Weeder மற்றும் Master Weeder போன்ற Garuda உற்பத்திகளையும் நாம் அறிமுகம் செய்து வைத்துள்ளோம்” என்று பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
“இந்த விவசாய உபகரணமானது இந்திய தொழில்நுட்பத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் கூலியாள் பற்றாக்குறைக்கு சிறந்ததொரு தீர்வாக அமைந்துள்ளதுடன் சிறு அளவில் மரக்கறி செய்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் அதிக அளவில் கூலித் தொழிலாளர்களுக்கான தொகைகளை செலுத்துவதிலிருந்து விடுதலை பெறவும் உதவுகின்றன.
Garuda விவசாய உபகரணம் உபயோகிப்பதற்கு மிகவும் இலகுவானதுடன் மரக்கறி செய்கையாளர்களின் உற்பத்தித்திறனை அதிகரித்து அவர்களுடைய செலவுகளைக் குறைத்துக்கொள்ளவும் உதவுகின்றது. DIMO வழங்கும் அதிசிறந்த விற்பனைக்குக் பின்னரான சேவை இந்த உபகரணம் சீராக தொழிற்படுவதற்கும் உத்தரவாதமளிக்கும்” என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.
DIMO Agri அறிமுகப்படுத்தியுள்ள Mahindra நவீன உற்பத்தி வரிசையில் புதிய Arjun Novo மற்றும் Mahindra Yuvo டிராக்டர்கள் அடங்கியுள்ளன.
புதிய Arjun Novo டிராக்டர் பரந்த வகையான விவசாயப் பயன்பாடுகளை வெற்றிகரமாக முன்னெடுக்க உதவுவதுடன் அது கொண்டுள்ள புதிய உயர்-மத்திம- குறைவான இயந்திர இயக்க பரிமாற்ற முறை மற்றும் 15F+3R கியர்கள் தனித்துவமான 7 மேலதிக வேகங்களையும் வழங்குகின்றன.
30-45 குதிரை வலுவுடன் வெளிவந்துள்ள Mahindra Yuvo டிராக்டர்கள், உயர் தொழில்நுட்ப கட்டுப்பாட்டு வால்வு வடிவமைப்பு மற்றும் 1500 கிலோ எடையைச் சுமக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. DIMO விவசாயப் பிரிவு இலங்கையில் அனைத்து வகையான Mahindra டிராக்டர்களையும் தருவித்து நிர்வகித்து வருகின்றது.
மேலும் இந்தியாவிலிருந்து தருவிக்கப்படுகின்ற CLAAS அறுவடை இயந்திரங்களுக்கான ஏகபோக விநியோகத்தராகவும் DIMO Agri செயற்பட்டு வருகின்றது. விவசாயம் தொடர்பான இன்னும் பல உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பங்களையும் தீர்வுகளையும் இலங்கையில் அறிமுகப்படுத்தி, தனது உற்பத்தி வரிசையை மேலும் விஸ்தரிக்கவும் DIMO Agri திட்டமிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM