(எம்.நியூட்டன்)

மாற்றத்தை எதிர்பார்த்திருக்கும் நீங்கள் அந்த மாற்றத்தில் பங்குகொள்வதற்கு ஜனநாயக பாரம்பரியமிக்க கட்சியான தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு உங்கள் ஆதரவை தரவேண்டும் என தமிழர் விடுதலைக்கூட்டணியின் .சிரேஷ்ட தலைவரும் வேட்பாளருமான சண்முகராஜா அரவிந்தன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்

தேர்தல் காலம் நெருங்கிவரும் சூழலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள் உச்சக்கட்ட. மோதல் நிலை உருவாகியுள்ளது. அவ்வாறான சூழலில் அந்தக் கட்சியலுள்ள ஒருவரே தவறானவர் என்றும் ஏனையவர்கள் திறம்படச் செயலாற்றுபவர்கள் என்ற சாரப்பட கருத்துக்களை கூறுகின்றார்கள் அவ்வாறு என்றால் ஒருவர் பிழைவிட்டால் ஏனையவர்கள் மக்கள் நலன் பற்றிச் சிந்தித்தார்களா அல்லது மக்கள் அது பற்றி வெ ளிப்படையாக கதைத்தார்களா? அவ்வாறு செய்யாது விட்டு விட்டு தேர்தல் என்றதும் ஒருவர் தான் தவறானவர் ஏனையவர் சிறந்தவர்கள் எனக்கூறி ஒருவர் மீது குற்றத்தைச் சுமத்திவிட்டு நாங்கள் நல்லவர்கள் எனக்கூறுவது ஏற்புடையது அல்லது. நீங்கள் அவர்களை நிராகரிக்கவேண்டும் நீங்கள் இதனைப் புரிந்துகொள்ளவேண்டும்.

கடந்த காலங்களில் எத்தனையோ சந்தர்பப்ங்கள் கிடைத்தது. ஆனால் அவற்றைச் செய்யாது இன்று அபிவிருத்தி , உரிமைகளை நாங்களே செய்வோம் என்று கூக்குரல் இடுகின்றார்கள். கிடைத்த சந்தர்ப்பங்களை முறையாகப் பயண்படுத்தியிருந்தால் மக்களின் அடிப்படைத்தேவைகள் பலவற்றை நிறைவேற்றியிருக்கமுடியும். அரசியல் அமைப்பை கொண்டுவருகின்றோம் எனக்கூறியவர்கள் நல்லாட்சியில் இடம்பெற்ற நெருக்கடிகளுக்காக முண்டுகொடுத்து அவர்களைப் பாதுகாத்தார்கள் . மக்கள் நலனில் காட்டவில்லை. இன்று அமைச்சைப் பெறப்போகின்றோம் என்ற கருத்தையும் கூறத்தொடங்கிவிட்டார்கள் அவ்வாறு என்றால் மக்களாகிய நீங்கள் இனியும் ஏமாறப்போகின்றீர்களா? மாற்றம் ஒன்றை எதிர்பார்த்திருக்கும் நீங்கள் இந்த மாற்றத்தில் பங்குகொள்ள பழம் பெரும் கட்சியான ஜனநாயக பாரம்பரியமிக்க கட்சியான தமிழர் விடுதலைக்கூட்டணிக்கு உங்கள் ஆதரவை தரவேண்டும் என்றார்.