மேற்கு நேபாளத்தில் கடும் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 23 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.

தலைநகர் காத்மாண்டுவிலிருந்து வடமேற்கே 200 கி.மீ (125 மைல்) தொலைவில் உள்ள மியாக்டி மாவட்டத்தில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதுடன், 30 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

அங்கு பல வீடுகள் சேதமடைந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களைத் தேடுவதற்காக மீட்புப் படையினர் பணியில் ஈடுப்பட்டுள்ளமையால் உயிரழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி 50 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

அண்டை நாடான காஸ்கி மாவட்டத்தில், ஏழு பேர் உயிரழந்துள்ளதாக சுற்றுலா நகரமான போகாராவில் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், தூர மேற்கு பகுதியில் உள்ள ஜாஜர்கோட் மாவட்டத்தில் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இங்கு காணமல்போன எட்டு பேரை தேடி வருவதாக பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் எல்லையிலுள்ள தெற்கு சமவெளிகளில், கிழக்கு இந்திய மாநிலமான பீகாரில் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் கொடிய வெள்ளத்தை ஏற்படுத்தும் கோஷி நதி ஆபத்து மட்டத்திற்கு மேலே பாய்கிறது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் செப்டம்பர் பருவமழையின் போது மலைப்பாங்கான நேபாளத்தில் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்படுபகிறமை குறிப்பிடத்தக்கது.