பெய்ஜிங் (சின்ஹூவா) கொவிட்-19 தொற்றுநோயின் விளைவான தாக்கம் மற்றும் உலக பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் சகலமுனைகளிலும் சீனாவை ஒரு சுபீட்சமான சமுதாயமாக கட்டியெழுப்புவதற்கு தலைமைதாங்கி வழிநடத்தும் சீன கம்யூனிஸ்ட் கட்சி அதன் 99ஆவது வருடாந்த நிறைவை ஜூலை முதலாம் திகதி அடைந்தது. 140கோடி சீன மக்களுக்கான ஒரு  நலமார்ந்த சமூகத்தை உருவாக்கும் அதன் நூற்றாண்டுக் குறிக்கோளை திட்டமிட்டபடி அடைவதில் தனக்குள்ள பற்றுறுதியை அந்த கட்சி மீளவும் வலியுறுத்தியிருக்கின்றது. இந்த மாற்றம் நவீன வரலாற்றில் மிகவும் பிரமிக்கவைக்கும் நிகழ்வுகளில் ஒன்றாக அமையும்.

கம்யூனிஸ்ட் கட்சி தாபிக்கப்பட்டபோது அது நீண்ட நாள் நிலைக்காது என்று தவறான மதிப்பீடுகள் செய்யப்பட்டன. தப்பபிப்பிராயங்களையும் அவநம்பிக்கையையும் கூட அது எதிர்கொண்டது. அத்தகைய கட்சியே இந்த அதிசயத்தை நிகழ்த்தியிருக்கின்றது. உலகம் பூராகவும் இன்று நிச்சயமற்ற நிலை காணப்படுகின்றது. ஆட்சிமுறையின் நியாயப்பாடு பற்றிய வரைவிலக்கணம் கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. இந்த பின்புலத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சிந்தனைகளினதும் நடைமுறைகளினதும் பொருத்தப்பாடு அதிகரிப்பதுடன் சர்வதேச சமூகத்தின் பார்வையில் உற்சாகத்தையும் கொடுக்கின்றது.

தாபக இலட்சியத்துக்கு உண்மையாய் இருத்தல்

1921 ஜூலை முதலாம் திகதி கட்சி தாபிக்கப்பட்ட தினத்திலிருந்து தேசத்தை புத்திளமை கொண்டதாக்குவதற்கு - சீன மக்களுக்கான கடமையை நிறைவேற்றுவதற்கு சீன கம்யூனிஸ்ட்டுகள் போராடிக்கொண்டே வந்திருக்கின்றார்கள். ஆட்சிக்கு வந்து ஏழு தசாப்தங்களுக்கு பிறகு சீன கம்யூனிஸ்ட் கட்சி சீனாவை ஒரு பின்தங்கிய – ஒதுக்க நிலையிலிருந்த விவசாய சமுதாயம் என்ற நிலையிலிருந்து உலகின் இரண்டாவது பெரிய திறந்த பொருளாதாரமாக மாற்றியிருக்கின்றது.

இப்போது சீன கம்யூனிஸ்ட் கட்சி ஆயிரம் ஆண்டுகளாக தேசத்தை அச்சுறுத்தி வந்த முற்றுமுழுதான வறுமையை ஒழிப்பதற்கான போராட்டத்துக்கு தலைமைத்தாங்கிக் கொண்டிருக்கின்றது. நாட்டை சுபீட்சத்தை நோக்கி வழிநடத்தும் முயற்சிகளில் ஒரு தனிக் குடும்பம் கூட கவனிக்கப்படாமல் ஒதுக்கிவிடப்படாதிருப்பதை உறுதி செய்வதற்கு கட்சி அதன் சிறந்த தொண்டர்களை வறுமை ஒழிப்பு போராட்டத்தின் முன்னரங்கங்களுக்கு அனுப்புகிறது.

File:Taro field near Nanjing, China, 1921.jpg - Wikimedia Commons

மக்களின் நலன்களை அடிப்படையாகக்கொண்டு அதன் கோட்பாட்டை உறுதியாக  பின்பற்றுகின்ற கட்சி – கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ சேவைகள், வீட்டுவசதி தொடங்கி சுற்றுச்சூழல், பாதுகாப்பு மற்றும் நீதி ஆகியவை வரை – சிறப்பான வாழ்வொன்றுக்கான மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு பாடுபடுவதை ஒருபோதும் நிறுத்தவில்லை. சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கென்று சொந்தமான விசேட நலன்கள் எதுவும்  இல்லை. அபிவிருத்திக்கு குந்தகமாக இருக்கின்ற தடைகளை துடைத்தெறிவதற்கும் தன்னல அதிகார கும்பல்களின் உறைவிடங்களை  தகர்த்தெறிவதற்கும் ஒருபோதும் கட்சி அஞ்சியதில்லை.

அதன் காரணத்தினால் தான் சீன கம்யூனிஸ்ட் கட்சி மூலோபாய ரீதியிலும் நடைமுறை சாத்தியமான வழியிலும்  சிந்திப்பதற்கான தகுதியையும் ஆற்றலையும் கொண்டிருக்கின்றது. கட்சியின் தலைமைத்துவம் நாட்டின் நிலைபேறான எதிர்காலத்திலும் நீண்டகால அடிப்படையிலான திட்டங்களை வகுப்பதிலும் கண்ணும் கருத்துமாக இருக்கின்ற அதேவேளை, மக்களின் உடனடி அக்கறைக்குரிய முக்கியமான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு குறுகியகால அடிப்படையிலான இலக்குகளையும் வகுத்து செயற்படுகின்றது.

15 Largest Cities in China (2019) - Swedish Nomad

அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய திருப்தியின் மட்டங்களை பொறுத்தவரையில், 2019 உலகளாவிய தரவரிசையில் சீனா உச்சத்தில் இருப்பதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் மூலம் (pநற சுநளநயசஉh ஊநவெநச) (pew research center) கண்டறியப்பட்டிருக்கின்றது. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட சீனர்களில் 86 சதவீதத்துக்கும் அதிகமானோர்  கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான சீன அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது திருப்தி தெரிவித்திருக்கின்றார்கள்.

உலகளாவிய ரீதியில் இந்த திருப்தி நிலையின் சராசரி மட்டம் 47 சதவீதமாகவே இருந்து வருகின்றது என்பது கவனிக்கத்தக்கது. மக்களின் பரந்தளவிலான இந்த ஆதரவு நீண்டகால அடிப்படையிலான ஆட்சி முறையில் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மீதான நம்பிக்கைக்கும் பலத்துக்கும் முக்கிய காரணமாகும்.

IPAC ready to confront and contain harm to mankind caused by ...

 சொந்த பாதையை உறுதியாகப் பின்பற்றல்

'சீனப் பண்புகளுடனான சோசலிஸம்' என்று உத்தியோகபூர்வமாக அழைக்கப்படுகின்ற வெற்றிக்கான சீனாவின் உபாயத்தை கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கியது. இது சீனாவின் தேசிய நிலைவரங்களுக்கு பொருத்தமான பாதையாக இருக்கின்றது. இந்த பாதையை பின்பற்றி சீனா சீர்;திருத்தங்களை தொடர்ந்து முன்னெடுத்து கொண்டிருப்பதுடன் பொருளாதாரத்தையும் திறந்துவிட்டிருக்கின்றது.

வளங்களை ஒதுக்குவதில்; தீர்க்கமான பாத்திரத்தை சந்தை வகிக்கின்ற வகையிலான சந்தை – அரசாங்க உறவுமுறை ஆரோக்கியமான பொருளாதார அபிவிருத்தியை உறுதியான முறையில் தொடர்ந்து ஊக்குவிப்பதற்கு சிறந்தமுறையில் சேவையாற்றிக்கொண்டிருக்கின்றது. சமூக படைப்பாற்றல் ஊக்குவிக்கப்படுகின்றது. சீனாவின் அரசியல் மற்றும்  சமூக நடவடிக்கைகளில் 'மக்களே அரசாங்கத்தை நிர்வகிக்கும்' கோட்பாடு நடைமுறைக்குள்ளாக்கப்படுகின்றது.

சவால்களுக்கு மத்தியில் சீனா அதன் புத்தாக்கம், பெரிய மத்தியதர வர்க்கம் மற்றும் வளமான கலாசார வாழ்வு ஆகியவற்றின் மூலமாக அதன் மீள் எழுச்சியை நிருபித்திருக்கிறது. முன்னெப்போதையும் விட நம்பிக்கை பலமாக இருக்கின்றது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் நெருக்கடியின் விளைவாக உலக பொருளாதாரம் 4.9சதவீதத்தினால் சுருங்கிப்போயிருக்கின்ற நிலையில், சீனா மாத்திரமே இவ்வருடம் வளர்ச்சியை காணக்கூடிய ஒரேயொரு பிரதான பொருளாதார நாடாக இருக்கின்றது என்று சர்வதேச நாணய நிதியம் முன்னறிவிப்பு செய்திருக்கின்றது.

தூய்மையாக்குவதற்கான ஆற்றல்

சுயசீர்திருத்தம், கண்டிப்பான சுயஆட்சி முறை ஆகியவற்றை முன்னெடுப்பதற்கான துணிச்சலை கொண்டிருப்பது  கம்யூனிஸ்ட் கட்சியின் பண்பின் மிகவும் பிரத்தியேகமான அங்கமாகும். அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிவிட்டு மிக விரைவாகவே அதை இழக்கின்ற வரலாற்று வட்டத்தை தகர்க்கத் தவறிய பல அரசியல் சக்திகளிடமிருந்து சீன கம்யூனிஸ்ட் கட்சி பல படிப்பினைகளை பெற்றிருக்கிறது. அது ஒழுங்கு கட்டுப்பாட்டை கண்டிப்பான முறையில் பேணி பாதுகாத்து பணியாற்றும் பாங்கை மேம்படுத்துகின்றது; ஊழலை எதிர்த்து போராடி தவறான செயற்பாடுகளை தண்டிக்கின்றது. கட்சியினதும் அரசினதும் பல நிறுவனங்களை தழுவியதாக பரந்தளவில் பாரிய நிறுவன சீர்;திருத்தங்களையும் சீனா பூர்த்திசெய்து எதிர்கால அபிவிருத்திக்கான பாதையை வகுத்திருக்கிறது. அதன் சுய சீர்திருத்தங்கள் ஒருபோதும் முடிவடையாது.

90th Anniversary of China's Communist Party - The Atlantic

சீன கம்யூனிஸ்ட் கட்சி கற்றுக்கொள்வதிலும் நிலைவரங்களுக்கு ஏற்றமுறையில் தந்திரோபாயங்களை கடைப்பிடிப்பதிலும் உறுதியான ஆற்றலை கொண்ட வலிமையான அமைப்பாகும். தத்துவார்த்த ஆய்வுகளை முன்னெடுத்து கட்சி சீனப் பின்புலத்தில் மார்க்சிசத்தை ஏற்றுக்கொண்டிருக்கின்றது. மக்கள் சகலருக்கும் பொதுவான ஒருங்கிணைந்த – திறந்த - பசுமையானதும் புத்தாக்கங்களை அடிப்படையாகக்கொண்டதுமான அபிவிருத்தியினூடாக நாட்டை வழிநடத்துவதற்கான ஆற்றலை  கம்யூனிஸ்ட் கட்சி மேம்படுத்தியிருக்கிறது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி ஜனநாயக மத்தியத்துவத்தை உறுதியாக கடைபிடிக்கின்றது. உள்கட்சி ஜனநாயகத்தை முழுமையாக விரிவுபடுத்தி சகல மட்டங்களிலும் கட்சியின் முன்முயற்சிகளுக்கும் ஆக்கத்திறன்களுக்கும் போதுமான வாய்ப்பை கட்சி வழங்குகிறது. தீர்மானங்கள் எடுக்கப்பட்டதும் அவை செயற்திறனுடன் நடைமுறைபடுத்த வேண்டும்.

சகல பகுதிகளிலும் பணிகளை ஒருங்கிணைப்பதில் கட்சி ஒட்டுமொத்தமான தலைமைத்துவத்தை வழங்குகிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் மக்கள் காங்கிரஸ், அரசாங்கங்கள், மேற்பார்வை அமைப்புகள், நீதித்துறை மற்றும் சமூக அமைப்புகள் ஒருங்கிணைந்து பணியாற்றுகின்றன

அத்தகைய பொறிமுறைகள் சிக்கலான தேசிய சூழ்நிலைகளுடனான பெரிய ஒரு நாட்டுக்கு விசேடமாக முக்கியமானவை. தொற்றுநோய் தடுப்பு, கட்டுப்பாடு, இயற்கை அனர்த்தங்களின்போது மக்களை பாதுகாத்தல் மற்றும்; இனத்துவ சிறுபான்மையினரின் மேம்பாட்டுக்கு உதவுதல் போன்ற முக்கிய பிரச்சினைகளை கையாள்வதற்கு வளங்களை பகிர்ந்துகொள்வதில் இந்த முறைமை பயனுறுதியுடையது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் இலட்சியங்களுக்கு பலமான நடுத்தூணாக விளங்கும் துறைசார் அதிகாரிகளையும் தகுதியும் திறமையும் கொண்டவர்களையும் அணியாக கம்யூனிஸ்ட் கட்சி திரட்டுகிறது. அதிகாரிகளை தெரிவு செய்வதிலும் நியமிப்பதிலும் கடைபிடிக்கப்படுகின்ற பிரத்தியேகமான ஒழுங்கமைப்பு ஏற்பாடுகள் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் ஐக்கியமான தலைமைத்துவத்தை ஒழுங்குசெய்வதுடன் உறுதிப்பாட்டையும் கொள்கைகளில் தொடர்ச்சியையும் பேணிக்காத்து அபிவிருத்திக்கான உத்வேகத்தையும்; கொடுக்கின்றது.

உலக நோக்கு

ஏனைய நாடுகளின் அபிவிருத்தி அனுபவங்களை திறந்த மனதுடன் நோக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சி, அதன் சொந்த அனுபவங்களை உலக நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள தயாராக இருக்கின்றது. உலக பல்துருவமயம், பொருளாதார உலகமயமாக்கல், தகவல் தொழில்நுட்ப பிரயோகம் மற்றும் கலாசார பல்வகைமை ஆகிய எழுச்சி பெற்று வரும் போக்குகளையும் கம்யூனிஸ்ட் கட்சி தழுவுகிறது.

முழு மனித குலத்துக்கும் பொதுவான எதிர்காலத்துடன் ஒரு சமுதாயத்தை கட்டியெழுப்பவதற்கு கட்சி பற்றுறுதி கொண்டிருக்கிறது. பொருள்வள அசமத்துவம் மற்றும் வர்த்தகம், முதலீடு தொடங்கி காலநிலை மாற்றம் பயங்கரவாதம் மற்றும் அமைதிகாக்கும் பணிகள் வரை உலகளாவிய பிராந்திய பிரச்சினைகளை தீர்ப்பதில் சீனா தவிர்க்க முடியாத சக்தியாக வந்துவிட்டது.

சீன கம்யூனிஸ்ட் கட்சி சீன மக்களுக்கு சேவை செய்வதில் மாத்திரமல்ல மண்டலமும் பாதையும் செயற்திட்டத்தின் (Belt and Road Initiative) ஊடாக முழு உலகினதும்; அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்து கொண்டிருக்கிறது என்று எகிப்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சாலாஹ் அட்லி கூறினார். 'பரஸ்பர பயன், சமாதானம், சுபீட்சம் ஆகியவற்றின் அடிப்படையில் சர்வதேச ஒத்துழைப்பு மூலோபாயமொன்றை சீனா முன்னெடுக்கின்றது'.

The 'Communist Party evil; Chinese people good' myth - Asia Times

உலகின் மைய அரங்கத்துக்கு நெருக்கமாக இப்போது நகர்ந்திருக்கும் சீனா முன்னெப்போதையும் விட தேசிய மீள் எழுச்சிக்கு நெருக்கமாக வந்திருக்கிறது. முதல் நூற்றாண்டுக் குறிக்கோளை வெற்றிகரமாக அடைவதற்கு பல இடர்பாடுகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. சீனா இன்னமும் உலகின் மிகப்பெரிய வளர்முக நாடாகவே இருக்கின்றது. வர்த்தக தற்காப்பு வாதமும் ஒருதலைப்பட்ச வாதமும் உலகில் நிச்சயமற்ற தன்மையை கொண்டு வருகின்ற சூழ்நிலையில் சிக்கலான வெளியுலகுக்கு சீனா முகம்கொடுக்கிறது.

இன்னொரு உன்னதமான இலக்கை முன்னெடுப்பதற்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து பாடுபடவேண்டியிருக்கிறது. அதாவது வளம்பொருந்திய, கலாசார ரீதியில் மேம்பட்ட, அமைதியான, அழகான சுபீட்சமுடைய நவீன சோசலிஸ நாட்டை உருவாக்குவதே அந்த குறிக்கோளாகும்.

சீன கம்யூனிஸ்ட் கட்சி 99 வயதை அடைந்திருக்கும் நிலையில் புதிய யுகமொன்றுக்கான வரலாற்று அழைப்புக்கு பதிலளிக்க அதன் பணிகளை புதிதாக தொடங்குகிறது.