(இராஜதுரை ஹஷான்)

கொவிட்-19 வைரஸ்  முழுமையாக இல்லாதொழிக்கப்படவில்லை.  சுகாதார  தரப்பினர்  விதித்துள்ள  சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை   பொது மக்கள்   கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வைரஸ் பரவல் தொடர்பில் போலியான செய்திகளை  வெளியிடுபவர்களுக்கு எதிராக கடுமையாக  சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

மில்லேனிய பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்  கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்த பிரதமர் மேலும் கூறுகையில்,

பொருளாதார வீழ்ச்சி கொவிட்-19 வரைஸ்  தாக்கம்  என பல்வேறுப்பட்ட  சவால்களை     தற்போது  நாம் எதிர்க்கொண்டுள்ளோம்.

பொதுத்தேர்தல் அனைத்து பிரச்சினைகளுக்கும்  தீர்வினை வழங்கும் விதமாக இருக்க  வேண்டுமே தவிர    முரண்பாடுகளை தோற்றுவிப்பதாக இருக்க  கூடாது.

ஜனாதிபதியின்   கொள்கைத்திட்டங்களை  செயற்படுத்த  பலமான மற்றும் நிலையான அரசாங்கம் தோற்றம் பெறவேண்டும். 

கடந்த  அரசாங்கத்தை போன்று முரண்பாடான அரசாங்கம்  தோற்றம் பெற்றால்  நாடு பாரிய  பின்னடைவை சந்திக்கும்.

ஆகவே  பொதுஜன பெரமுன  தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெறுவது  அவசியமானது.    ஜனாதிபதியின்  கொள்கைகளை  நடைமுறைப்படுத்தும் அரசாங்கம் தோற்றம் பெற வேண்டும் என்பது குறித்து மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.