திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யுவதியொருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த  நபரை நேற்றிரவு (10) கைது செய்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் சிறிமங்களபுர,சோமபுர,பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை யொன பொலிஸார்  மேலும் தெரிவித்தனர்.

குறித்த நபர் பதினெட்டு வயதுடைய யுவதியொருவரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அப் பெண்ணை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்த முயற்சித்ததாக யுவதியின் தாய் சேருநுவர பொலிஸ் நிலையத்தின் அவசர தொலைபேசிக்கு விடுத்த முறைப்பாட்டையடுத்து சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து சேருநுவர பொலிஸார்,  சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.