கிழக்கு மாகாணத்தில் தேர்தல் சட்டவிதி மீறல்கள் தொடர்பாக 38 முறைப்பாடுகள்

Published By: Digital Desk 3

11 Jul, 2020 | 01:21 PM
image

நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பில் இதுவரை 38 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக கிழக்கு மாகாண பிரதி தேர்தல் ஆணையாளர் எஸ்.சுதாகரன் தெரிவித்தார்.

தேர்தல் சட்டத்தை மீறல் மற்றும் முறைப்பாடுகளை பதிவு செய்ய 0262222352 என்ற தொலைபேசி இலக்கம் மூலம்  அல்லது 0765318905 என்ற வட்ஸ்அப்/வைபர் இலக்கங்கள ஊடாக மேற்கொள்ளமுடியும்.

அத்துடன் 15200 வாக்காளர்கள் அஞ்சல் வாக்காளர்களாக வாங்களிக்க தகுதிபெற்றுள்ளார்கள். எதிர்வரும் 13 ஆம் திகதி சுகாதாரத்துறையினரும் (சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அலுவலர்கள்),14,15ம் திகதிகளில்  ஏனைய அரச உத்தியோகத்தர்களும் 16,17 ம் திகதிகளில் மாவட்ட செயலகம், முப்படை மற்றும் பொலிஸ் திணைக்கள உத்தியோகத்தர்களும்   அஞ்சல் வாக்குகளை பதிவு செய்ய முடியும் என்றும் பிரதி தேர்தல் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் இம்முறை வாக்கெண்ணும் நிலையமாக திருகோணமலை விபுலானந்தாக்கல்லூரி செயற்படவுள்ளது.

மேலும் வாக்களிப்பதற்கு தேசிய அடையாள அட்டை,செல்லுபடியான கடவுச்சீட்டு,செல்லுபடியான சாரதி அனுமதிப்பத்திரம், அரச ஓய்வூதிய அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை, ஆட்களை பதிவு செய்யும் திணைக்களத்தால் விநியோகிக்கப்படும் மதகுருமார்களுக்கான அடையாள அட்டை மற்றும் 2019 சனாதிபதித் தேர்தலில்  தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டையை தாங்கள் வதிந்துள்ள  பிரிவின் கிராம அலுவலரிடம் ஒப்படைத்து புதுப்பித்த அடையாள அட்டை என்பன ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் மேற்குறித்த அடையாள அட்டையற்றவர்கள் வாக்களிக்க தேர்தல் ஆணைக்குழுவின் தற்காலிக அடையாள அட்டையை தாமதமின்றி பெறல் வேண்டும்.

இதற்காக தங்களது மேலுடம்பின் 2 1/2 சென்றிமீற்றர் அகலத்தையும் 3 சென்றிமீற்றர் உயரத்தையும்  கொண்ட வர்ண அல்லது கறுப்பு வெள்ளை புகைப்பட பிரதிகள் இரண்டுடன் தங்களது கிராம அலுவலரை சந்தித்தல் வேண்டும். தற்காலிக அடையாள அட்டைகள்  கிராம அலுவலரால் ஏற்கப்படும் இறுதித்திகதியாக 2020.07.29 அமைந்துள்ளது.

அத்துடன் தெளிவற்ற அடையாள அட்டைகள், அமைச்சு, திணைக்களங்கள், அரச நிறுவனங்களால் விநியோகிக்கப்பட்ட அலுவலக அடையாள அட்டைகள் மற்றும் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் பற்றுச்சீட்டு போன்ற புகைப்படத்துடன் கூடிய அல்லது புகைப்படமற்ற வேறெந்த ஆவணமும் வாக்கெடுப்பு நிலையத்தில் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாதென்றும் பிரதி தேர்தல் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55