கொரோனா பரவல் காரணமாக பிரித்தானியாவில் சிக்கி தவித்த 234 இலங்கையர்கள் இன்று (11.07.2020) நாடு திரும்பினர். 

லண்டனில் ஹீத்ரோ விமான நிலையத்திலிருந்து இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.504 என்ற  விசேட விமானம் மூலம் இன்று சனிக்கிழைமை காலை 8.45 மணிக்கு இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பிய அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளளார்கள்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள பி.சி.ஆர்பரிசோதனைக்கூடத்தின் நடவடிக்கைகள் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.

அதன்படி, ரஷ்யாவில் மொஸ்கோவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்களே பி.சி.ஆர் பரிசோதனைக்கூடத்தில் பரிசோதிக்கப்பட்ட முதல் குழுவினராவர்.