கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் இடம்பெற்ற சிங்கபூர் பொதுத்தேர்தலில் ஆளும் மக்கள் செயற்பாட்டுக் கட்சி (PAP) மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது. ஆனால் பெரும்பாண்மையை  இழந்துள்ளது.

1965 முதல் ஆட்சியிலுள்ள மக்கள் செயற்பாட்டுக் கட்சி 93 பாராடாளுமன்ற இடங்களில் 83 இடங்களை 61.2 சதவீதம் வாக்குகளால் வென்றுள்ளது. இது 2015 வாக்கெடுப்பில் கிட்டத்தட்ட 70% சதவீதம்  இருந்தது.

எதிர்க்கட்சி தொழிலாளர் கட்சி 10 இடங்களைப் பெற்றுள்ளது.

கொரோனா வைரஸ் வெடிப்பை அரசாங்கம் கையாள்வது குறித்த வாக்கெடுப்பாக இந்தத் தேர்தல் பரவலாகக் காணப்பட்டது.

எனவே தற்போதைய பிரதமர் லீ ஷசின் லூங் மீண்டும் பதவியை தக்கவைத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தின் மத்தியில் தேர்தலை நடத்திய  ஒரு சில நாடுகளில் சிறிய நகர் அளவான சிங்கப்பூரும் ஒன்றாகும்.

எனினும் வாக்காளர்கள் முகக்கவசம் மற்றும் கையுறை அணிவது கட்டாயமாக்கப்பட்டு நேரத்திற்கு வாக்களிப்பதற்கான இடங்கள் அளிக்கப்பட்டு கடும் கட்டுப்பாடுகளுடனேயே வாக்களிப்பு இடம்பெற்றது.

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் சிங்கப்பூரில் 45,000 க்கும் அதிகமானவர்கள் நோய் தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள்.

தொற்றுநோய்களின் போது பெரிய அளவிலான கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் அதிக ஆபத்து என்று கருதப்படுவதால், கடந்த சில மாதங்களில் ஒரு சில நாடுகளில் மட்டுமே தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் தென் கொரியாவிலும், ஜூன் மாத இறுதியில் செர்பியாவிலும் தேர்தல் நடைபெற்று ஆளும் கட்சியே வெற்றியீட்டியுள்ளது.

எனவே தற்போதைய பிரதமர் லீ ஷசின் லூங் மற்றொரு தவணைக்கு தமது பதவியை தக்கவைத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

நாட்டின் ஸ்தாபக தந்தையும்,நீண்டகால ஆட்சியாளருமான லீ குவான் யூவின் மகன்  லீ ஷசின் லூங் 2004 முதல் பதவியில் இருக்கிறார் - ஆனால் வரவிருக்கும் கால அவகாசம் அவரது கடைசி காலமாக இருக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.