உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்று 11 நாட்களில் ஏழராவது முறையாக ஒரே நாளில் அதிகமானதொற்றாளர்கள் இனங்காப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனம் உலகளாவிய ரீதியில் கடந்த 24 மணிநேரத்தில் 228,102  கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, பிரேசில், இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஜூலை 4 ஆம் திகதி  ஒரே நாளில் தினசரி புதிய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 212,326 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 5,000  இருந்துள்ளதாகவும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 

உலகளாவிய கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை புதன்கிழமை 12 மில்லியனை கடந்துள்ளது. ஏழு மாதங்களில் 555,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக ரொய்டர்ஸ் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.