சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக இரு வழக்குகள் தாக்கல்

11 Jul, 2020 | 08:59 AM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ராஜகிரிய பகுதியில், கடந்த 2016 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர்  பாட்டலி சம்பிக்க ரணவக்க பயணித்த வாகனம் விபத்திற்குள்ளானதில் சந்தீப் சம்பத் எனும் இளைஞர் ஒருவர் காயமடைந்த விவகாரத்தில்,  சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவருக்கு எதிராக சட்ட மா அதிபர் கொழும்பு மேல் நீதிமன்றில் இரு குற்றப் பத்திரிகைகள் ஊடாக இரு வேறு வழக்குகளை தாக்கல் செய்துள்ளார்.

ஒரு வழக்கில்  முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க மட்டும் பெயரிடப்பட்டுள்ளதாகவும் மற்றைய வழக்கில் சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட மூவர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளதாகவும், சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர்  அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி  வெலிக்கடை பொலிஸ் பிரிவில் டப்ளியூ.பி.கே.பி. 4575 எனும் ஜீப் வண்டியின் சாரதியாக செயற்பட்டு  அபாயகரமாக வாகனம்செலுத்தி ஒருவரை படுகாயத்துக்கு உட்படுத்தியமை தொடர்பில் சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராக குற்றப் பத்திரம் முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 இதனைவிட இரண்டாவது குற்றப் பத்திரிகையானது, முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அந்த விபத்து இடம்பெற்ற காலப்பகுதியில் வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக செயற்பட்டு தற்போது பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள உதவி பொலிஸ் அத்தியட்சர் சுதத் அஸ்மடல, சம்பிக்கவின் சாரதியாக  செயற்பட்ட  திலும் துஷித குமார ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

16 குற்றச்சாட்டுக்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில்,  சாட்சிகளை உருவாக்கியமை,  சாட்சிகளை அழித்தமை,  வாகன விபத்தை ஏற்படுத்திய சம்பிக்க ரணவக்க என்பவருக்கு சட்ட ரீதியிலான தண்டனையில் இருந்து தப்பிக்க  நீதிவான் நீதிமன்றுக்கு பொய்யான அறிக்கையை சமர்ப்பித்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள்  அதில் முன்வைக்கப்பட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மழையுடனான வானிலை தொடரும்...

2023-09-30 06:56:26
news-image

இலங்கையை ஏழ்மை நிலையில் இருந்து மீட்க...

2023-09-30 07:16:05
news-image

வெளிநாட்டுக் கடன்களை செலுத்த அரசாங்கத்திடம் முறையான...

2023-09-29 18:00:41
news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08
news-image

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்...

2023-09-29 18:06:29
news-image

மகளின் காதல் விவகாரம் : காதலனின்...

2023-09-29 17:58:54