( எம்.எப்.எம்.பஸீர்)
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ பகல் புகைப்பட ஊடகவியலாளர் ஒருவரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில், ராடா நிறுவன வழக்கு தொடர்பிலான விசாரணைகள் குறித்து புகைப்பட செய்திகளை சேகரிக்கச் சென்ற, மவ்பிம சிங்கள பத்திரிகையின் புகைப்பட ஊடகவியலாளரையே பொலிஸ் பரிசோதகர் நியூமால் ரங்க ஜீவ அச்சுறுத்தி இவ்வாறு இடையூறு ஏற்படுத்தியுள்ளார்.
அத்துடன் குறித்த புகைப்பட ஊடகவியலாளர் கடமைகளை முன்னெடுக்கவும், பொலிஸ் பரிசோதகர் ரங்க ஜீவவினால் தடை ஏற்படுத்தப்பட்டு, மேல் நீதிமன்ற பொலிஸ் காவலரண் வரை குறித்த புகைப்பட ஊடகவியலாளர் அனைவரும் பார்த்திருக்க இழுத்து செல்லப்பட்டார்.
இந் நிலையில் பொலிஸ் காவலரனுக்கு தன்னை இழுத்து சென்ற பொலிஸ் பரிசோதகர் ரங்க ஜீவ, அங்கு வைத்து தன்னை தாக்க முற்பட்டதாகவும், அவரது உத்தரவுக்கு அமைய கமராவின் சிப் பரிக்கப்பட்டதாகவும், சம்பவத்துக்கு முகம்கொடுத்த புகைப்பட ஊடகவியலாளர் அகில ஜயவர்தன கேசரியிடம் தெரிவித்தார். இது குறித்து கொழும்பு மேல் நீதிமன்ற பொலிஸ் காவலரணில் முறைப்பாட்டினை தான் பதிவு செய்ததாகவும் அவர் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது,
இன்றைய தினம் ராடா நிதி மோசடி விவகார வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றின் முதலாம் இலக்க விசாரணை அறையில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்ற விசாரணை அறைக்கு வெளியே புகைப்பட, வீடியோ ஊடகவியலாளர்கள் குறித்த வழ்ககு தொடர்பிலான புகைப்பட, காணொளிகளை பதிவுச் செய்ய காத்திருந்தனர்.
அப்போது மேல் நீதிமன்றில் விசாரணையில் உள்ள போதைப் பொருள் வழக்கொன்றில் சாட்சியம் வழங்க பொலிஸ் பரிசோதகர் ரங்க ஜீவவும் நீதிமன்றுக்குள் இருந்துள்ளார்.
இந் நிலையில் ராடா வழக்கு விசாரணைகள் நிறைவடையும் தருவாயில் புகைப்பட ஊடகவியலாளர்கள் புகைப்படமெடுக்க தயாராக இருந்த போது, பொலிஸ் பரிசோதகர் ரங்க ஜீவ புகைப்பட ஊடகவியலாளர்களின் கவனம் இருந்த இடத்தால் வந்துள்ளார்.
அப்போது பரீட்சார்த்த புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்த ஊடகவியலாளரின் கமராவுக்குள் ரங்க ஜீவவின் புகைப்படமும் சிக்கியுள்ளது.
இந் நிலையிலேயே அங்கு வந்துள்ள பொலிஸ் பரிசோதகர் ரங்க ஜீவ, குறித்த புகைப்பட ஊடகவியலாளரை மட்டும், சட்டையினால் பிடித்து அச்சுறுத்தி, பொலிஸ் காவலரன் நோக்கி இழுத்து சென்றுள்ளார்.
' நியோமால் ரங்க ஜீவ வரும் போது நான் சில புகைப்படங்களை எடுத்தேன். அப்போது திடீரென என்னை நோக்கி வந்து நீ யார், எதற்காக என்னை புகைப்படம் எடுக்கின்றாய் என என்னை அச்சுறுத்தினார். நான் எனது ஊடகவியலாளர் அடையாள அட்டையை அவரிடம் காண்பிக்க முயன்றும் அது எதனையும் கவனத்தில் கொள்ளாமல், என்னை இழுத்துச் சென்று பொலிஸ் காவலரனில் வைத்து அச்சுறுத்தி தாக்க முற்பட்டார்.' என புகைப்பட ஊடகவியலாளர் அகில ஜயவர்தன கேசரியிடம் தெரிவித்தார்.
பொலிஸ் பரிசோதகர் ரங்க ஜீவ, வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் கொலைசெய்யப்பட்ட விவகாரத்தில் பிரதான பிரதிவாதியாக பெயரிடப்பட்டு, அவருக்கு எதிராக வழக்கு விசாரணை நடை பெறுவதும், இன்று அது குறித்த வழக்கின் விசாரணைகள் இடம்பெற்றமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM