(ரி.விரூஷன், மயூரன் )

யூலை 5ஆம் திகதி தமிழிழ விடுதலைப் புலிகளால் உயிர் நீத்த கரும்புலிகளை நினைவு கூருவதற்கான நாளாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் யாழ்.பல்கலைகழத்தில் இந் நாளை அனுஷ்டித்திருந்தனர். 

இதன்படி  பல்கலைக்கழக மாணவர் ஒன்று கூடும் பகுதியல் இன்று காலை 10.30 மணிக்கு மெழுகு வர்த்தி ஏற்றி அஞ்சலி  செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை மாணவர் விடுதி உட்பட பல்கலைகழக வாளகத்தினுள்ளும் மற்றும் சில இடங்களிலும் "தமிழீழ மக்களுக்கு ஓர் அறிவித்தல் " எனும் தலைப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. 

குறித்த சுவரொட்டிகளுக்கு தமிழீழ மக்கள் படை எனும் அமைப்பு உரிமை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.