களுத்துறை மீகஹதென்ன ஆரம்பப் பாடசாலையில் தரம் ஒன்றில் தமது குழந்தைகளை சேர்க்க அனுமதி கோரி பாடசாலைக்குள் அத்துமீறி உட் பிரவேசித்த  9 தாய்மார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த ஒன்பது பேர் உட்பட 10 பேரின் பிள்ளைகளை பாடசாலையில் இணைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி,அண்மையில்  பிரதி அமைச்சர் பாலித்த தேவரப்பெருமவால் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதோடு இறுதியில், அவர் தற்கொலைக்கு முயன்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்து வந்து பலவந்தமாக அவர்களை பாடசாலையில் சேர்க்க முயன்ற  9 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

குறித்த 9 தாய்மார்களையும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.