புனரமைப்பு மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் (RADA) முன்னாள் தலைவர் டிரான் அலஸ் உட்பட நான்கு பிரதிவாதிகளை மோசடி குற்றச்சாட்டுக்களிலிருந்து நீதிமன்றம் விடுவித்துள்ளது.

இந்த உத்தரவினை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி பிறப்பித்தார்.

அத்துடன் நீதிவான், நான்கு பிரதிவாதிகளின் பயணத் தடையை நீக்கவும், அவர்களின் கடவுச்சீடுக்களை விடுவிக்கவும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்துக்கு உத்தரவு பிறப்பித்தார்.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அழிவடைந்த வீடுகளைப் புனரமைப்பதற்காக திறைசேரியில் இருந்து ராடா நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட 124 மில்லியன் ரூபா நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள டிரான் அலஸ் உள்ளிட்ட பிரதிவாதிகள் நால்வருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

ராடாவின் முன்னாள் தலைவர் டிரான் அலஸ், ராடா தலைமை நிர்வாக அதிகாரி சாலியா விக்ரமசூரியா, கணக்காளர் ஜெயந்த டயஸ் சமரசிங்க மற்றும் தமிழீழ விடுதலை விடுதலை புலிகளுடன் தொடர்பிலிருந்து எமில் காந்தன் ஆகியோருக்கு எதிராக கடந்த அரசாங்கத்தின் காலத்தில் சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.