கோவிட்-19 நெருக்கடியில், தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கும், நாட்டில் நிதி வலுவூட்டலை உருவாக்குவதற்கும் ஒரு தொலைநோக்குடன் NDB’யின் 'ஜயகமு ஸ்ரீ லங்கா’ முயற்சி சிறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களை (SMEs) ஆதரிக்கிறது. மேலும், வளர்ந்து வரும் ஏற்றுமதியாளர்கள், ஆர்வமுள்ள தொழில்முனைவோர் மற்றும் இலங்கையின் உற்சாகமான கண்டுபிடிப்பாளர்களுக்கும் இந்த முயற்சி உதவுகிறது.

இலங்கையின் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு NDB வங்கியின் அர்ப்பணிப்பு, உலகளாவிய சவாலுக்கு மத்தியில் உள்ளூர் வணிகங்களை ஸ்திரத்தன்மையை வளர்ப்பதற்கு இது உதவுகிறது. எதிர்காலம் நாளைய சிந்தனைத் தலைவர்கள், புதுமைப்பித்தர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு சொந்தமானது என்பதால், NDB’யின் 'ஜயகமு ஸ்ரீ லங்கா’ பல உள்ளூர் வணிகங்களுக்கு ஆதரவளிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் வாழ்வாதாரத்தை வளர்த்துக் கொள்ள உதவுவதோடு நாட்டிற்குள் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தவும் உதவுகிறது.  

NDB இன் இந்த முன்னோடி முன்முயற்சி, சமூக பின்னடைவை மேம்படுத்துவதற்கும், பெண் தொழில்முனைவோருக்கு அதிகாரம் அளிப்பதற்கும், ஆதரவளிப்பதற்கும், நிதி ஸ்திரத்தன்மையை ஊக்குவிப்பதற்கும், SME’க்கள் இ-காமர்ஸ் (e-commerce) மூலம் தங்கள் எல்லைகளை விரிவுபடுத்துவதற்கும், ஒட்டுமொத்த வணிக நடவடிக்கைகளை ஆற்றலுடன் மேம்படுத்துவதற்கும் உதவுகிறது. வர்த்தகத்தை ஊக்குவித்தல், பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துதல் மற்றும் நாட்டில் நிதி வலுவூட்டலை ஏற்படுத்துதல் ஆகிய குறிக்கோளுடன் ‘'ஜயகமு ஸ்ரீ லங்கா’ முயற்சி, வணிகங்களை அபிவிருத்தி செய்வதற்கும் வளர்ப்பதற்கும் வர்த்தக நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும் பரந்த அளவிலான நிதி மற்றும் நிதி சாராத சேவைகளை வழங்குகிறது. பல உள்ளூர் வணிகங்கள் துன்பங்களுக்கு மத்தியில் செழித்து வளர இந்த தளம் தொடர்ந்து உதவுகிறது மற்றும் வணிக சமூகத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது. 

கோவிட் -19 தொற்றுநோய் உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் வணிகங்களையும் தொழில்களையும் சீர்குலைத்திருந்தாலும், உலகளாவிய விநியோகச் சங்கிலி சீர்குலைவு (global supply chain disruption) காரணமாக இது வர்த்தகத்திற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. தற்போதைய நிச்சயமற்ற தன்மை இருந்தாலும், இலங்கையின் ஏற்றுமதியாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் புதிதாகக் கிடைத்த வாய்ப்புகளுடன் பொருளாதார நடவடிக்கைகளை மறுதொடக்கம் செய்யலாம். இதைக் கருத்தில் கொண்டு, NDB இன்  ‘ஜயகமு ஸ்ரீ லங்கா’’ அத்தகைய தொழில்முனைவோர்களுக்கும் வணிகங்களுக்கும் அந்த வாய்ப்புகளைப் பிடிக்கவும், இலங்கை பொருளாதாரத்தை மீட்பு மற்றும் வளர்ச்சியின் பாதையில் துரிதப்படுத்தவும் ஆதரவளிப்பதன் மூலம் அதன் வாக்குறுதியை நிறைவேற்றுகிறது.

இந்த முயற்சி இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு பணி மூலதன நிதி வடிவில் மற்றும் ஏற்றுமதிக்கு முந்தைய மற்றும் பிந்தைய நிதி மற்றும் பிற வர்த்தக தொடர்பான வசதிகளுடன், வங்கி உத்தரவாதம், கடன் சுழலும் எஸ்.டி.எல் (STL) கடிதங்கள், ஃபோரெக்ஸ் (Forex) வசதிகள் போன்ற நிதி உதவியை வழங்குகிறது. மேலும், மூலதன செலவு நிதி, சலுகை கடன் விகிதங்கள், அசையாத / அசையும் பாதுகாப்பின் மீது அதிக எல்.டி.வி, அத்துடன் சரக்கு காப்பீட்டு அட்டையுடன் (Cargo Insurance Cover) $ 30,000 வரை நிபந்தனைகளுடன் வழங்கப்படுகின்றன.

'ஜயகமு ஸ்ரீ லங்கா’வின் நிதி சாராத உதவி, தள்ளுபடி விலையில் சேவைகளைப் பெறுவதற்கு வருங்கால வாடிக்கையாளர்களுக்கும் உள்ளூர் வர்த்தகங்களுக்கும் இடையிலான தொடர்புகளை எளிதாக்குவதற்கும் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் (EDB), இலங்கை ஏற்றுமதி கடன் காப்பீட்டுக் கழகம் (SLECIC), சேம்பர் ஆஃப் காமர்ஸ், தராஸ் (Daraz) மற்றும் Code360.com உதவி வழங்கும். இந்த பல்வேறு வகையான சேவைகளுக்கு மேலதிகமாக, NDB தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு விரிவான நிறுவன வள திட்டமிடல் (ERP) தீர்வையும் வழங்குகிறது.

இது பங்கு மற்றும் கடனாளர் மேலாண்மை, ஊதிய மேலாண்மை, பணப்புழக்க மேலாண்மை மற்றும் தகுதிவாய்ந்த ஆலோசகர்களைப் பயன்படுத்தி SME வாடிக்கையாளர்களுக்கான பிற அத்தியாவசிய கணக்கியல் செயல்பாடுகளுக்கு உதவுகிறது. தவிர, NDB நிதி அல்லாத உதவிகளையும் ஏற்பாடு செய்துள்ளது; வணிக பதிவுக்கான உதவி, காப்புரிமை பதிவு மற்றும் கணக்கியல் தொடர்பான ஆலோசனை சேவைகள் அவற்றில் சில. NDB இன் 'ஜயகமு ஸ்ரீ லங்கா’உண்மையிலேயே நிதி ஸ்திரத்தன்மையை நிலைநாட்டவும், உள்ளூர் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கும் ஒரு முக்கிய கருவியாகும்.

அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் புதுமையான மற்றும் ஊக்கமளிக்கும் நிதி தீர்வுகளை வழங்கும் ஒரு முன்னணி வங்கியாக, NDB’யின் 'ஜயகமு ஸ்ரீ லங்கா’ தனது வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கும் உள்ளூர் பொருளாதாரத்திற்கும் சரியான தீர்வு அளிக்கிறது. வளர்ந்து வரும் வணிகங்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுடன் நிதி ரீதியாக அதிகாரம் பெற்ற தேசத்தை உருவாக்குவதற்கான தொலைநோக்குடன், NDB அதன் அனைத்து விசுவாசமான புரவலர்களுக்கும் திறமையான, பயனுள்ள மற்றும் மேம்பட்ட தீர்வுகள், சேவைகள் மற்றும் வங்கி அனுபவங்களை வழங்குவதில் ஒரு முன்னோடியாகவும் இருந்து வருகிறது. அதன் நிலையான சிறப்பை உந்துகின்ற நீண்டகால வாடிக்கையாளர்கள், பல ஆண்டுகளாக வங்கியின் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு ஒரு சான்றாக நிற்கிறார்கள்.