ட்ரம்ப் கோபுரத்திற்கு முன்னால் உள்ள வீதியில் வரையப்பட்ட 'பிளாக் லிவ்ஸ் மேட்டர்'

Published By: Digital Desk 3

10 Jul, 2020 | 03:57 PM
image

நியூயோர்க் நகரத்தில் மன்ஹாட்டனிலுள்ள ட்ரம்ப் கோபுரத்திற்கு (Trump Tower) வெளியே வீதியில் “ பிளாக் லிவ்ஸ் மேட்டர் ” என்று வீதியில் வரையப்பட்டுள்ளது.

நியூயோர்க் நகர மேயர் பில் டி ப்ளாசியோ வியாழக்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மன்ஹாட்டன் கோபுரத்திற்கு முன்னால் பிளாக் லிவ்ஸ் மேட்டரை வரைவதில் பங்குபற்றினார்.

மேயர் பில் டி ப்ளாசியோ இந்த மாத ஆரம்பத்தில் வீதியில் மஞ்சள் நிறத்தால் வரைவதற்கு அங்கீகித்தார்

இந்நிலையில், நிறப்பூச்சு ரோலரைப் பிடித்து வீதியில் வரைந்த மேயர் "வெறுப்பின் அடையாளமாக" இது இருக்கும் என்று ட்வீட் செய்தார்.

ட்ரம்ப் கோபுரத்தின் முன்னால் ஐந்தாவது அவென்யூவில் பிரம்மாண்டமான மஞ்சள் எழுத்துக்களில் இனநீதியை வரைவதற்கு பில் டி ப்ளாசியோ, அவரது மனைவி சிர்லேன் மெக்ரே மற்றும் ரெவ், அல் ஷார்ப்டன் ஆகியோர் உதவி புரிந்தனர்.

நகரத்தைச் சுற்றியுள்ள பல இடங்களில் தெருக்களில் இந்த கோசம் வரையப்படும் என்று முதலாவதாக  ட்ரம்ப் டவர் முன் பிளாக் லிவ்ஸ் மேட்டரை வரைவதற்கான திட்டத்தை மேயர் அறிவித்தார்.

பிளாக் லிவ்ஸ் மேட்டர் "கறுப்பின மக்களின் வாழ்க்கையை அங்கீகரித்து பாதுகாப்பதற்கான ஒரு இயக்கம்" என்று டி பிளேசியோ மீண்டும் ட்வீட் செய்தார்.

ஐந்தாவது அவென்யூவில் மஞ்சள் வண்ணப்பூச்சு வரைந்தவர்களில் ஒருவரான ரஹிமா டோரன்ஸ், 20, ஓவியம் ஒரு அடையாளமாக இருந்தாலும், “இது இன்னும் சிலவற்றின் ஆரம்பம்” என்று கூறினார்.

டிரம்பின் சொந்த வானளாவிய கட்டிடத்தின் முன்னால் உள்ள இடம் “எங்களுக்கு முக்கியம் என்பதைக் காட்டுகிறது, மேலும் நீங்கள் எங்களை புறக்கணிக்க முடியாது என்பதை இது காட்டுகிறது” என்று அவர் கூறினார்.

கொலம்பியா மாநில மேயர் முறியல் பௌசரால் வெள்ளை மாளிகைக்கு செல்லும் ஒரு வீதியில் வண்ணம் தீட்டப்பட்ட பெரிய மஞ்சள் நிற  பிளாக் லிவ்ஸ் மேட்டர் சுவரோவியமே அமெரிக்காவில் வொஷிங்டன் நகரத்தில் வரைந்த  முதலாது வீதி சுவரோவியமாகும்.

மின்னபொலிஸில் ஜோர்ஸ் புளொய்ட் கொல்லப்பட்டதில் கோபமடைந்த அமெரிக்கர்களுடன் ஒற்றுமையைக் காட்டும் வகையில் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது என்று பௌசரா தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு முன்னர் ட்ரம்ப் கோபுரத்தில் வாழ்ந்தார், ஆனால் பின்னர் அங்கு சிறிது நேரம் செலவிட்டார். அவர் கடந்த ஆண்டு தனது உத்தியோகபூர்வ இல்லத்தை நியூயோர்க்கிலிருந்து புளோரிடாவுக்கு மாற்றினார். அவரது வணிக சாம்ராஜ்யத்தின் தலைமையிடமாக தற்போதுவரை ட்ரம்ப் கோபுரம் உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எவரெஸ்ட்டை வென்றதன் 70 ஆண்டு பூர்த்தி...

2023-05-29 17:07:59
news-image

இத்தாலியில் சுற்றுலா படகு கவிழ்ந்ததால் நால்வர்...

2023-05-29 16:08:21
news-image

பெலாரஸ் ஜனாதிபதிக்கு ரஸ்யாவில் நஞ்சூட்டப்பட்டதா ?...

2023-05-29 15:24:17
news-image

புட்டினின் கூலிப்படையான வாக்னர் குழுவை அவுஸ்திரேலியாவில்...

2023-05-29 12:56:25
news-image

போதைப்பொருள் கடத்திய பாகிஸ்தானின் ஆளில்லா விமானத்தை...

2023-05-29 13:00:52
news-image

மருத்துவமனைகளை இலக்குவைக்கும் யுத்த குற்றங்கள் சூடானில்இடம்பெறுகின்றன-...

2023-05-29 12:38:53
news-image

சீனாவில் தயாரிக்கப்பட்ட பயணிகள் விமானம்

2023-05-29 12:11:46
news-image

'கீர் பவானி மேளா' கொண்டாடும் காஷ்மீர்...

2023-05-29 11:44:10
news-image

ரஸ்யா பெலாரஸ் கூட்டணியில் இணையும் நாடுகளிற்கு...

2023-05-29 11:04:51
news-image

மணிப்பூரில் 40 கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொலை

2023-05-29 10:26:13
news-image

தமிழ்நாட்டில் பொதுத்தேர்வில் 600க்கு 591 மதிப்பெண்...

2023-05-29 10:02:46
news-image

துருக்கிய ஜனாதிபதித் தேர்தலில் தையீப் அர்துவான்...

2023-05-29 10:57:10