2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2019 நவம்பர் மாதம் 29 ஆம் திகதி வரை இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக் காலமானது நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த ஆணைக்குழுவின் பதவிக் காலத்தை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ 2020 நவம்பர்  9 ஆம் திகதி வரை நீடித்துள்ளார்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக் காலம் பொதுவாக ஆறு மாதங்கள் ஆகும். எனினும் அவற்றின் பணி முழுமையடையாவிட்டால் அது நீடிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.