காணாமல்போன இளைஞன் சடலமாக மீட்பு

Published By: Priyatharshan

05 Jul, 2016 | 02:13 PM
image

மட்டக்களப்பு, கல்லடி பாலத்திலிருந்து கடலுக்குள் பாய்ந்து காணாமல்போன இளைஞனின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை காலை சின்ன உப்போடை பகுதியில் கரையொதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

காணாமல்போன மட்டக்களப்பு, கூழாவடி பகுதியை சேர்ந்த கிஸோர் என்னும் 19 வயது இளைஞனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கல்லடி பழைய பாலம் அருகில் துவிச்சக்கர வண்டி ஒன்று அநாதரவாக இருந்ததையடுத்து, அது தொடர்பான தகவல்கள் மட்டக்களப்பு பொலிஸாருக்கு வழங்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து குறித்த இளைஞனை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன. மீனவர்களும் கடற்படையினரும் இணைந்து இந்த தேடுதலை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் குறித்த இளைஞனின் சடலம் இன்று காலை சின்னஉப்போடை கப்பலேந்திய மாதா ஆலயத்திற்கு அருகாமையில் கரையொதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதுடன் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15