அமெரிக்காவில் வியாழக்கிழ‍ைமை மாத்திரம் 60,646 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ளி விபர தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அமெரிக்காவில் மொத்தமாக 3,115,345 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் அதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 133,000 அதிகமாக பதிவாகியுள்ளது.

அதே நேரம் கொரோனா தொற்றுக்குள்ளான 969,111 பேர் குணமடைந்துள்ளனர். 

இதேவேளை சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 12,268,630 ஆக பதிவாகியுள்ளதுடன், உயிரிழப்புகளின் தொகையும் 554,924 ஆக காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Photo Credit : CNN