170 கோடி மைல்களை கடந்து “ ஜுனோ ” விண்கலம் வியாழன் கிரகத்துக்குள் நுழைந்தது

Published By: Raam

05 Jul, 2016 | 01:58 PM
image

வியாழன் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக 110 கோடி அமெரிக்க டொலர்கள் செலவில் திட்டமிட்டு ஐந்தாண்டுகளுக்கு முன் ஏவப்பட்ட ஜூனோ விண்கலம் 170 கோடி மைல்கள் (270 கோடி கிலோமீற்றர்) கடந்து இன்று வெற்றிகரமாக வியாழன் கிரகத்தினுள் நுழைந்தது.

சூரியனிலிருந்து ஐந்தாவதாக அமைந்துள்ள வியாழன் (Jupiter) சூரிய மண்டலத்திலேயே மிகப்பெரிய கோள் ஆகும். 

சூரிய மண்டலத்தின் உட்கோள்களான புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகிய பாறைக் கோள்களைப் போன்றில்லாது, புறக்கோள்களில் ஒன்றான வியாழன் சூரியனைப் போல் வாயுக்கள் திரண்ட கோளமாகும். 

சூடான பாறையும், திரவ உலோகம் சிறிதளவு உட்கரு கொண்டிருந்தாலும், மேல்தளத்தில் திரட்சியான திடப்பொருள் எதுவும் வியாழனில் கோளில் இல்லாமை குறிப்பிடத்தக்கது. 

பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 24 மணி நேரமாகும் போது, மிகப்பெரிய வடிவம் கொண்ட வியாழன் 9 மணி 50 நிமிடத்தில், அதாவது வினாடிக்கு 8 மைல் வேகத்தில் வெகு விரைவாகத் தன்னைத்தானே சுற்றி விடுகிறது.

சூரிய சுற்றுப்பாதையில், சுமார் 484 மில்லியன் மைல் தூரத்தில், சூரியனைச் சுமார் 12 பூகோள ஆண்டுகளுக்கு ஒருமுறை வியாழன் சுற்றி வருகிறது. 

இந்த வியாழன் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான ‘நாசா’ கடந்த 2011 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதியன்று புளோரிடா மாநிலத்தில் உள்ள கேப் கார்னிவல் ஏவுதளத்தில் இருந்து ‘ஜூனோ’ என்ற ஆளில்லா விண்கலத்தை விண்ணில் ஏவியமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஐந்தாண்டுகளாக விண்வெளியை சுற்றிப் பயணித்த ஜூனோ இன்று வெற்றிகரமாக வியாழனின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்தது. 

அமெரிக்க நேரப்படி, 4ஆம் திகதி இரவு 11.53 மணியளவில் (இலங்கை நேரப்படி இன்று காலை சுமார் 9 மணியளவில்) வியாழனுக்குள் ஜூனோ பிரவேசித்த வெற்றியை நாசா அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உரையாடல்களை நேரடியாக மொழிபெயர்க்கக்கூடிய ஏர்போட்கள் ;...

2025-03-19 12:17:11
news-image

செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் 20...

2025-03-15 19:00:33
news-image

ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் சிறப்பம்சங்கள்

2024-09-10 15:40:23
news-image

உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப்...

2024-08-29 19:56:50
news-image

இந்தியாவின் நடமாடும் மருத்துவமனைகள் ; ஆக்ராவில்...

2024-05-22 20:10:13
news-image

“பிக்சல் ப்ளூம்” கொழும்பு தாமரை கோபுரத்தில்...

2024-05-11 09:37:56
news-image

கடந்த வருடம் இலங்கையில் கணினிகளில் ஒரு...

2024-05-10 12:24:26
news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57