கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, பின் தளர்த்தப்பட்டிருக்கிறது. தற்பொழுது மக்கள் பொதுவெளியில் பயணிக்கும் பொழுது செனிடைசர் எனப்படும் கிருமி நாசினியை பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது. 

இதனால் பக்க விளைவு ஏற்படுமா? என்று கேட்டால், மருத்துவர்கள் இதனை சரியான விகிதத்தில் பயன்படுத்தாமல் கூடுதலாக பயன்படுத்தினால் பக்க விளைவு ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட பிறகு அதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்காக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஒவ்வொருவரும் தங்களது இரண்டு கைகளையும் சவர்காரம் போட்டு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். 

இந்நிலையில் சவர்காரம் என்பதை வீட்டில் தான் பெருமளவில் பயன்படுத்த இயலும். வெளியிடங்களில் பயணிக்கும் பொழுதோ அல்லது சவர்காரமும்,தண்ணீரும் கிடைக்காத போதோ செனிடைசர் எனப்படும் கிருமிநாசினியை பயன்படுத்தலாம்.

செனிடைசரில் அட்கஹால்  சேர்க்கப்பட்டது மற்றும் அட்கஹால் சேர்க்கப்படாதது என்ற இரண்டு வகையான கிருமிநாசினிகள் இருக்கின்றன. தற்போது சந்தையில் வேறு வடிவங்களிலும் கிருமிநாசினிகள் கிடைக்கிறது.

மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கிருமி நாசினியைப் பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சிலருக்கு செனிடைசரை பயன்படுத்தும் போது, அவர்களது தோலில் ஒவ்வாமை ஏற்பட்டு அரிப்பு ஏற்படுகிறது. 

அதேபோல் குழந்தைகளுக்கும் செனிடைசர் பயன்படுத்துவதை முற்றாக தவிர்க்க வேண்டும். மேலும் சில செனிடைஸர்கள் தோலில் உள்ள துவாரங்களை பாதித்து, புற்றுநோய் உண்டாக்கும் காரணியாக அமைந்துவிடுகிறது. 

அதே தருணத்தில் வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளை இத்தகைய கிருமிநாசினிகள் 100% அழிப்பதில்லை என்றும் ஆய்வுகள் மூலம் தெரிய வந்திருக்கிறது. இதனால் கிருமி நாசினி பயன்படுத்துவது ஒரு தற்காலிக நிவாரணம் மட்டுமே. அதனால் கொரோனா வைரஸ் கிருமிகளிடமிருந்து முழுமையாக தற்காத்துக் கொள்ள வேண்டுமென்றால் சோப்பை தான் பயன்படுத்த வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

டொக்டர் கணேசன்.

தொகுப்பு அனுஷா.