காடுகளையும் வெளிநாடுகளுக்கு கொடுக்கும் அரசாங்கம் - சம்பிக ரணவக

Published By: Digital Desk 3

10 Jul, 2020 | 09:40 AM
image

(எம்.மனோசித்ரா)

சுற்றுச் சூழலை பாதுகாப்பதாகக் கூறியே ராஜபக்ஷக்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். ஆனால் இலங்கையின் காடுகளை அமெரிக்காவிற்கு கொடுக்க அரசாங்கம் செயற்படுவதாக  ஜாதிக ஹெல உருமயவின் தலைவர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

கம்பஹாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் பதாதைகள் அச்சிடப்போவதில்லை என்றும் பட்டாசு கொளுத்துவதில்லை என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கூறினார். தான் சூழலை நேசிப்பவர் என்று அவர் கூறினார். ஆனால் கம்பஹா மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவுடைய பதாதைகள் எல்லா இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சூழலை நேசிப்பதாகக் கூறி காடுகளை வெட்டுவதற்கும் மணல் அகழ்வதற்கும் பொதுஜன பெரமுனவினருக்கு அனுமதியளித்துள்ளார்.

மணல் அகழ்வினால் களனி மற்றும் கழு கங்கை என்பன முற்றாக சீரழிக்கப்பட்டன. அதனை தடுப்பதற்காக நாம் அனுமதிப்பத்திரங்களை வழங்கினோம். ஆனால் தற்போது அவை இரத்து செய்யப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல் முற்றாக சீரழிக்கப்பட்டது. அதற்கு தற்போதைய அரசாங்கமே அனுமதி வழங்கியது. ஆனால் பொது மக்கள் மத்தியில் இயற்கையை அதிகளவு நேசிப்பவர்களாக தங்களைக் காண்பித்துக் கொள்கின்றனர்.

கடந்த காலங்களில் வில்பத்து பற்றி உண்மைகளை வெளிப்படுத்தப் போவதாகக் கூறினார்கள். ரிஷாத் பதியுதீன் மீது குற்றஞ்சுமத்தினர். ஆனால் தற்போதைய அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன வில்பத்து பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களை வெளிநாட்டவர்களுக்கு தாரை வார்த்துள்ளார்.

இலங்கையில் நூற்றுக்கு 7 சதவீதமான நிலப்பரப்பு காடுகளாகும். பிரதேச செயலாளர்களுக்கு கீழ் காணப்பட்ட இவற்றை வன பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கொண்டு வந்தார். இது அவர் முன்னெடுத்த சிறந்தவொரு வேலைத்திட்டமாகும். அதற்கான விஷேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டது. அதன் மூலம் காடுகள் பாதுகாக்கப்பட்டன.

2009 ஆம் ஆண்டு நான் சுற்றாடல் அமைச்சராக இருந்த போது வன பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு வனங்களை பாதுகாப்பதற்கான அதிகாரத்தை அந்த திணைக்களத்திற்கு வழங்கினேன். ஆனால் தற்போது இதனையும் நீக்குவதற்கு அமைச்சரவையில் தீர்மானமெடுத்து இவர்கள் என்ன செய்கிறார்கள் ? பிரதேச செயலாளர்களிடம் ஒப்படைக்கின்றனர்.

பிரதேச செயலாளர்களிடம் இவற்றை வழங்கும் போது மாகாண அரசியல்வாதிகள் இதில் தலையிடுவார்கள். தேசிய சொத்துக்களை விற்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதைப் போன்று பாசாங்கு செய்யும் மஹிந்த ராஜபக்ஷவே கந்தக்காடு பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான நிலத்தை வெளிநாட்டு கம்பனிகளுக்கு விற்றுள்ளார். அதே போன்று மொனராகலை பிரதேசத்திலும் ராஜக்ஷக்களே இடங்களை விற்பனை செய்தனர்.

அமெரிக்க கம்பனிகளுக்கு இவ்வாறு இடங்களை வழங்கியதைப் போன்றே இலங்கையின் சுற்றுச் சூழலையும் விவசாயத்தையும் காட்டிக் கொடுப்பதற்கு முயற்சிக்கின்றனர். துறைமுக நகரத்தின் உரிமை உறுதிப்படுத்தப்பட்டதாகக் கூறுகின்றனர். துறைமுக நகரத்தை நாமே கட்டியெழுப்பினோம். ராஜபக்ஷக்கள் அல்ல. அதன் உரிமை வெளிநாட்டவர்களுக்கே வழங்கப்பட்டிருந்தது. அதனை அவர்களிடமிருந்து பெற்று நாட்டு பிரஜைகளுக்கு நாமே வழங்கினோம். ஆனால் இப்போது இவர்கள் அதன் உரிமை பற்றி பேச ஆரம்பித்திருக்கின்றனர்.

எனவே நாட்டு மக்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். எதிர் காலத்தில் தேசிய சொத்துக்களை குறிப்பாக இடங்களை விற்க முயற்சிப்பார்கள். மீதொட்டமுல்லை பிரதேசத்தை பூந்தோட்டாமாக மாற்றும் வேலைத்திட்டத்தை நாம் முன்னெடுக்கவிருந்தோம். ஆனால் தற்போது அந்த வேலைத்திட்டத்தை இரத்து செய்து அதனையும் விற்க தீர்மானித்துள்ளனர்.

தற்போது முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் ஜனாதிபதித் தேர்தலின் போது கூறப்பட்டவையல்ல. சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக கோத்தாபய ராஜபக்ஷ கூறினார். ஆனால் தற்போது நாட்டிலுள்ள காடுகளை வெட்டி வெளிநாடுகளுக்கு விற்கும் மாபியாக்களை உருவாக்கும் ஜனாதிபதியும் பிரதமருமே உள்ளனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43