ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 278 இலங்கையர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்.

இலங்கை எயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யு.எல் -226 என்ற சிறப்பு விமானத்தின் மூலமாகவே அவர்கள் இன்று அதிகாலை 4.50 மணியளவில் பண்டாரநாயக்க, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இதேவளை ஜப்பானின் நரிட்டோவிலிருந்து இலங்கை எயர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான யு.எல்-455 என்ற சிறப்பு விமானத்தின் மூலம் இன்று அதிகாலை 4.10 மணிக்கு மேலும் ஐந்து இலங்கையர்கள் பண்டாநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

மேலும் அதிகாலை 1.15 மணிக்கு கட்டாரின் தோஹாவிலிருந்து கட்டார் எயர்வேஸ் விமானத்தின் மூலமாக 24 வெளிநாட்டு மாலுமிகளும் விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த அனைவரையும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருந்ததாக விமான நிலைய ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.