பல்வேறு நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுவது உள்ளிட்ட அனைத்து கடல் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது தொடர்பில் கடல்சார் பாதுகாப்பின் அனைத்து அம்சங்களிலும் கடற்படை சிறப்பு கவனம் செலுத்தி வருவதாக கடற்படை பேச்சாளரான லெப்டினன்ட் கொமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்தார்.