தென் அமெரிக்க நாடான பொலிவியா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியான ஜீனைன் ஏயெஸிற்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிவியா நாட்டின் இடைக்கால ஜனாதிபதியான ஜீனைன் ஏயெஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் தெரிவிக்கயைில், தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாகவும், வைத்தியர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, பொலிவியாவின் சுகாதரத்துறை அமைச்சர் மற்றுமொரு அமைச்சர் என இரு அமைச்சர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்துள்ளது.

பொலிவியா நாட்டில் இதுவரை 42 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 1500 க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.