இந்தியாவுடன் இணக்கப்பாட்டை எட்டுவதில் அரசாங்கம் தோல்வி

10 Jul, 2020 | 06:33 AM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட மூன்று பளுத்தூக்கிகளையும் கப்பலிலிருந்து இறக்குதவில் ஏற்பட்ட தாமதம் காரணமாக குறித்த கப்பலுக்கு சுமார் 900 இலட்சம் ரூபா வரை தாமதக்கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. 

குறித்த பளுத்தூக்கி விகாரத்தை தொடர்ந்தும் துறைமுக தொழிற்சங்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் மற்றும் அரசாங்கத்தின் இழுபறிகளினாலேயே இவ்வாறானதொரு பாரிய தொகையை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி குறிப்பிட்டுள்ளது. 

தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று இடம்பெற்ற கட்சிக் கூட்டத்தின் போதே  இந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

குறித்த பளுத்தூக்கிகளை கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் பொருத்துவது குறித்து இந்தியாவுடன் அரசாங்கம் பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்திருந்த போதிலும் இணக்கப்பாட்டை எட்டுவதில் அரசாங்கம் தோல்விக் கண்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு மே மாதத்தில் இலங்கை , இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கூட்டு முயற்சியாக கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்தி திட்டத்திற்கான பூர்வாங்கல்ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டது. 

இந்த ஒப்பந்ததின் பிரகாரம் தறைமுகத்தின் உரிமம் 100 வீதமாக இலங்கை தறைமுக அதிகாரச்சபையை சார்ந்திருக்கும். திட்டத்திற்கான செலவீனமாக 700 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன்0.1 வீதத்திலான 40 ஆண்டுக்கால மென் கடனை  ஜப்பான் வழங்கவும் தீர்மானித்தது.  

உலகில் மிகவும் சிறந்த துறைமுக தொழில் நுட்பம் ஜப்பான் வசமே உள்ளது. இவ்வாறானதொரு நிலையில் தான் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியா மற்றும் ஜப்பானின் கூட்டு முயற்சியில் அபிவிருத்தி செய்வதற்கான ஏற்பாடுகள்  முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இந்நிலையிலேயே சீனாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட மூன்று பளுத்தூக்கிகளை  கொழும்பு துறைமுகத்தின்  கிழக்கு முனையத்தில் பொறுத்துமாறு வலியுறுத்திய துறைமுக தொழிற்சங்கம் போராட்டத்தில் ஈடுப்பட்டது.

எவ்வாறாயினும் குறித்த பளுத்தூக்கிகள் தற்போது கிழக்கு முனையத்தில் பொருத்தப்பட்டுள்ளதுடன், செயற்பாட்டு  நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான கட்டளை கிடைக்கப்பெறவில்லை என இலங்கை சுதந்திர ஊழியர் சங்கத்தின் துறைமுக கிளையின் தலைவர் பிரசன்ன களுத்துரகே தெரிவித்தார். 

அத்துடன் இந்தியாவின் கரையோரப் பகுதிகளில் 14 துறைமுகங்கள் அந்நிய முதலீடுகளுக்காக காத்திருக்கையில் கொழும்பு துறைமுகத்தின் மீதேன் ஈடுப்பாட்டை காட்ட வேண்டும் எனவும் கேள்வியெழுப்பினார்.

ஆனால் ஏற்கனவே திட்டமிட்டப்படி ஜப்பான் தொழில்நுட்பத்தை கிழக்கு முனையத்தில் உள்வாங்காது சீன பழுத்தூக்கிகள் பொறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48