கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக சேவையாற்றிய பெண் ஒருவர் மாரவில பிரதேசத்தில், விடுமுறைக்காக வீடு திரும்பியிருந்த நிலையில் நேற்றுக் காலை கொரோனா தொற்றுக்குள்ளானவராக இனங்காணப்பட்டார். 

இதனையடுத்து இவருடன் தொடர்புடையவர்கள் தொடர்ச்சியாக பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது.

இதற்கமைய குறித்த பெண்ணுடன் நெருக்கமான உறவை பேணிய 10 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.