சஹ்ரான் மற்றும் தேசிய தெளஹீத் ஜமாத் முகப்புத்தக பக்கம் குறித்து நாலக டி சில்வா சாட்சியம்

10 Jul, 2020 | 05:39 AM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹஷீம் தொடர்பில் தான் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் விஷேட  விசாரணைகளை ஆரம்பித்து, அவர் தொடர்பில் மட்டும் 14 கோவைகளை பராமரித்து வந்ததாக. பயங்கர்வாத புலனயவுப் பிரிவின் முன்னாள் பிரதான, பணி இடை நிறுத்தம்செய்யப்பட்டுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா தெரிவித்தார்.

சஹ்ரானை கைது செய்ய தானே, அவருக்கு எதிராக திறந்த பிடியாணையை நீதிமன்றில் பெற்றதாக சுட்டிக்காட்டிய அவர், சஹ்ரானை கைது செய்ய அவரின் நடமாட்டம் தொடர்பில் தகவல்களை வெளிப்படுத்தவென, பிரத்தியேக ரி.ஐ.டி. அதிகாரியை ( பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு) கல்முனையில் நிலை கொள்ளச் செய்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழு முன்னிலையில், நேற்று முன் தினம் இரவு சாட்சியமளிக்கும் போதே அவர் இந்த விடயங்களை வெளிப்படுத்தினார்.

21/4 உயிர்த்த ஞாயிறு தினம் இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல்களை மையப்படுத்தி அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க 1948 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க  விசாரணை ஆணைக் குழுக்கள் சட்டத்தின் (393 ஆம் அதிகாரம்) 2 ஆம் அத்தியாயத்தின் கீழ் கடந்த 2019 செப்டம்பர் 21 ஆம் திகதி நியமிக்கப்பட்ட ஐவர் கொண்ட ஜனாதிபதி  விசாரணை ஆணைக் குழுவின்  சாட்சி விசாரணைகள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஆணைக் குழுவில்  இடம்பெற்றது.

ஆணைக் குழுவின் தலைவர் மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  ஜனக் டி சில்வாவின் தலமையிலான மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதி  நிசங்க பந்துல கருணாரத்ன,  ஓய்வுபெற்ற நீதிபதிகளான  நிஹால் சுனில் ரஜபக்ஷ,  அத்தபத்து லியனகே பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சு செயலர் டப்ளியூ.எம்.எம். அதிகாரி ஆகியோர் முன்னிலையில்    குறித்த சாட்சிப் பதிவுகள் இடம்பெற்றன.

அரச சிரேஷ்ட சட்டஅதிகாரி ஒருவரின் நெறிப்படுத்தலில், முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா வழங்கிய சாட்சியத்தின் சுருக்கம் வருமாறு:

'  நான் கடந்த 2006 ஆம் ஆண்டு தேசிய உளவுத் துறையுடன் தொடர்புபட்டேன்.  முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து நான் கொழும்பின் பாதுகாப்புக்கு பொறுப்பாக அரச உளவுச் சேவையில் செயற்பட்டேன். அந்த சந்தர்ப்பத்தில், முன்னாள் பாதுகப்பு செயலரும்  தற்போதைய ஜனாதிபதியுமான கோத்தாபய ராஜபக்ஷவின் உயிரை இரு முறை காப்பாற்ற முடியுமானது.

பின்னர் 2014 ஆண்டு அரச உளவுச்  சேவையின் பயங்கரவாத  தடுப்புப் பிரிவுக்கு பொறுப்பாக  நான் நியமிக்கப்பட்டேன். அந்த பொறுப்பு வழங்கப்பட்ட  பின்னர் முதலாவதாக இஸ்லாம் அடிப்படைவாதம் தொடர்பில் தகவல் கிடைத்தது. மாளிகாவத்தை பிரதேசத்தில் பாரம்பரிய முஸ்லிம்களுக்கு எதிராக மாற்றுப் பாதையில் பயணித்த அப்துல் ராஷிக் என்ற நபர் தொடர்பில் அந்த தகவல் ஊடாக  தெரியவந்தது.

எவ்வாறாயினும், அப்துல் ராஷிகினால் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை தவ்ஹித் ஜமாத் அமைப்புடன் இணைந்திருந்த, காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த நபராக சஹ்ரான் ஹசீமை அரச உளவுச்  சேவை கடந்த 2014 ஆம் ஆண்டே இனங்கண்டிருந்தது. அப்போது அவரது நடவடிக்கைகள் அல்லது தீவிரவாத போக்குகள் வன்முறையை நோக்கி நகர்ந்திருக்கவில்லை. எனினும் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் போக்கு எச்சரிக்கை மணியாக இருந்தது.

2017 ஆண்டில் காத்தான்குடி பிரதேசத்தில் இருந்து வந்த ´வலிஉல்லா´ என்ற அமைப்பொன்று தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் வன்முறை நடத்தை குறித்து அப்போதைய பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு முறையிட்டிருந்தனர். இந்நிலையில், முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்த முறைப்பாடளித்த அந்த குழுவினரை என்னிடம் அனுப்பி வைத்ததன் பின்னர் அது தொடர்பில் விசாரணையொன்றை  ஆரம்பித்தேன்.

அப்போது தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் இணைய பக்கம் செயற்படவில்லை எனவும் அவர்களது  முகப் புத்தக பக்கம் தொடர்பிலும் நான்  பொலிஸ் மா அதிபருக்கு அறிக்கை ஊடாக தெளிவுபடுத்தியிருந்தேன்.

எப்படியோ சஹ்ரான் தொடர்பில் நான் 14 கோவைகளை  பேணி வந்தேன். 2017 ஆம் ஆண்டு காத்தான்குடி  பகுதியில் மற்றொரு அமைப்புடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து சஹ்ரான் ஹசீம் தலைமறைவானார். அதனால் அவரைத் தேட, அவர் தொடர்பில் தகவல்களை வெளிப்படுத்த பயங்கரவாத புலனய்வுப் பிரிவின் கல்முனை கிளையில் உள்ள ஒரு முஸ்லிம் அதிகாரியை நான் பிரத்தியேகமாக நியமித்தேன்.

என்.டி.ஜே.வின் இணைய நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் முகப்புத்தக பக்கம், அதனை சக்ஸ்கிரைப் செய்திருந்த  17,758 பேரின் நகர்வுகளை ரி.ஐ.டி. கண்காணித்தது. சஹ்ரானும் அவரது கூட்டாளிகளும் ஐ.எஸ்.ஐ.எஸ் பிரச்சாரத்தைப் பகிர்ந்து கொண்டபோது, பெரும்பாலான சக்ஸ்கிரைப் செய்த நபர்கள் அவற்றுக்கு சாதகமாகவே பதிலளித்தனர்

 2017 ஆம் ஆண்டு காத்தாண்குடி அலியார் சந்தியில் இடம்பெற்ற குறித்த மோதலி அடுத்து, சஹ்ரான் அடிப்படைவாத வன்முறை கலாசாரத்துக்குள் வந்துவிட்டமை தெரிந்தது. அது தேசிய பாதுகபபுக்கு அச்சுறுத்தலாக அமையும் என தனக்கு எனக்கு தோன்றியது.

 இந் நிலையிலேயே 2018 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் திகதி நீதிமன்ருக்கு அறிக்கை சமர்ப்பித்து, சஹ்ரானை கைது செய்ய திறந்த பிடியாணையைப் பெற்றுக்கொண்டேன்.

 இந் நிலையில் நான்  2018 செப்டம்பர் 20 ஆம் திகதி கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டேன். அவ்வாறு திறந்த பிடியாணை பெற்றது முதல்  நான் கட்டாய விடுமுறையில் சென்ற காலம் வரையிலான 3 மாதா காலப்ப்குதியில்  பயங்கர்வாத புலனௌய்வுப் பிரிவின் உளவுத் துறை அதிகாரிகளை ஈடுபடுத்தி  சஹ்ரானின் மனைவியின் வீடு, குருணாகல், காத்தாண்குடி பகுதிகளில்  அவரைக் கைதுச் எய்ய தேடுதல் நடாத்தினேன். எனினும்   அப்போது அவரைக் கைது செய்ய முடியாமல் போனது.

 நான் பயங்கரவாத புலனாயவுப் பிரிவின் பிரதானியாக கடமைகளை  பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு வாரமும் பொலிஸ் மா அதிபருடன் திங்கட் கிழமைகளில் விஷேட  சந்திப்புக்கள் இடம்பெற்றன. அதன்போது  சஹ்ரான் தொடர்பிலும் வேறு முஸ்லிம் அடிப்படைவாத நடவடிக்கைகள் தொடர்பிலும் நான் 87 வாராந்த அறிக்கைகளை பொலிஸ் மா அதிபருக்கு கையளித்துள்ளேன். பாதுகாப்பு செயலாளரும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்  ருவான் விஜேவர்தனவும் பங்கேற்ற  உளவுத்துறை மறுஆய்வுக் கூட்டத்தில் இந்த தகவலை பொலிஸ் மா அதிபர் பகிர்ந்துகொண்டிருந்தார்.

 உண்மையில், முஸ்லிம் அடிப்படைவாத நடவடிக்கைகளுக்கு எதிராக அல்லது சஹ்ரானுக்கு எதிராக அப்போது  பயங்கர்வாத தடை சட்டத்தின் வழக்குத் தொடர்வதை அப்போதைய அரசாங்கம் விரும்பவில்லை.' என  நாலக சில்வா சாட்சியமலித்தார்.

இதன்போது ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழ்வின் உறுப்பினர் ஒருவர்,  முஸ்லிமல்லாதவர்களைக் கொல்ல ச்ஹ்ரான் தனது ஆதரவாளர்களை அழைத்துள்ளார்.  இது பயங்கரவாதச் செயல் அல்லவா ? என்று  நாலக சில்வாவிடம் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பினார்.

 ' தமிழீழ விடுதலை புலிகளை கையாள்வதற்காக பயங்கர்வாத தடை சட்டம்  உருவாக்கப்பட்டது.  இஸ்லாமிய அடிப்படைவாதிகளை கையாள பயங்கர்வாத தடை சட்டத்தின்  விதிமுறைகளை கையாள்வதில் கடினம்  இருந்தது. அத்துடன் முன்னாள் அரசாங்கம் கூட பயங்கரவாத தடை சட்டத்தை பயன்படுத்துவதை விரும்பவில்லை,என்று  பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02