மாலபே தனியார் கல்­லூரி மாண­வர்­களை வைத்­தி­யர்­க­ளாக உள்­வாங்கக் கூடாது, அரச மருத்­து­வத்­ து­றை­யினை பாது­காக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என பல்­வேறு கோரிக்­கை­களை முன்­வைத்து மருத்துவ பீட மாணவர்கள் இன்று காலை கொழும்பு உயர் நீதிமன்ற வளாகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  'வைத்திய கல்வியை மயானத்திற்கு அனுப்பாதே, திருட்டு பட்டங்கள் பெறும் இடங்களை இல்லாமல் செய்,நீதி இல்லாமல் சட்ட எதற்கு?, போலி வைத்தியர்களுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்,சுகாதார துறையில் நம்பிக்கை பேனு" என வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.