திருகோணமலை, கோணேஸ்வர ஆலயம் தொடர்பாக பௌத்த மதகுருக்களால் மேற்கொள்ளப்படுகின்ற பௌத்த ஆதிக்கத்தை நிறுத்த ஜனாதிபதி தூரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈ.பி.ஆர்.எல். பத்மநாபா மன்ற தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள ஈ.பி.ஆர்.எல். பத்மநாபா மன்ற கரியாலயத்தில் இன்று வியாழக்கிழமை (09) இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பில்  அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில்,

பிரதம மந்திரியால் குறிப்பிட்ட தினங்களாக கூறப்படும் ஜனாதிபதியின் கீழுள்ள ஆணைக்குழுக்களை  மாற்றுவது தொடர்பான கருத்து சிறுபான்மை இனங்களின் குறிப்பாக தமிழர்களின் கருத்து சுதந்திரத்தையும். ஜனநாயகத் தன்மையையும், நல்லாட்சி முறையையும் இல்லாது ஒழித்து விடும். ஆணைக்குழுக்களை இல்லாமல் செய்வதன் ஊடாக ஒரு தனி நபரின் இராணுவ ரீதியான ஆட்சி முறையை மேலோங்கச் செய்யும்

மட்டக்களப்பு மாவட்டதிலுள்ள சில அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அரச நிருவாகத்தின் கீழ் செயற்படுகின்ற அமைப்புக்களின் ஒருசிலரின் செயல்பாடுகளும் ஒரு சில வேட்பாளர்களின் செயற்பாடுகளும் அரசதுறை சார்ந்த வளங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுவதை திணைக்களத் தலைவர்கள் தேர்தல் ஆணைக்குழு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாராளுமன்றத் தேர்தலில் அதிக ஆசனங்களை பெற்றால் மட்டுமே பாராளுமன்றத்தில் தமிழர்களுக்காக குரல் எழுப்புவதோடு பௌத்த ஆதிக்கத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்ட மக்களை காப்பாற்ற முடியும். எனவே அதிக ஆசனங்களை பெறக்கூடியவாறு உள்ள வீட்டுச்சின்னத்திற்கு வாக்களித்து வாக்குகளைப் பிரிப்பதற்காக போட்டிபோடுகின்ற வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாமென அறைகூவல்  விடுக்கின்றேன். ஏன்றார்