ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ள ஹிருணிகா

Published By: Vishnu

09 Jul, 2020 | 06:34 PM
image

(செ.தேன்மொழி)

போதைப் பொருள் கடத்தல் காரர்களினால் ஏற்பாடு செய்யப்படும் பிரசார கூட்டங்களில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ கலந்துக் கொண்டால் அவர் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர , தயவு செய்து இவ்வாறான கூட்டங்களை தவிர்க்குமாறும் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

ராஜபக்ஷாக்கள் எப்போதும் போதைப் பொருள் கடத்தல் மற்றும் மதுபான விற்பனைக்கு எதிராக செயற்படுபவர்கள் என்று தங்களை காண்பித்துக் கொண்டு , இந்த செயற்பாடுகளில் ஈடுப்படுபவர்களுடன் இணைந்தே தங்களது அரசியல் நகர்வுகளை முன்னெடுப்பார்கள்.

இந்த வகையிலே இன்றைய தினம் தெமட்டகொட பகுதியில் பிரபள போதைப் பொருள் கடத்துல்காரரான தெமட்டகொட சமிந்தவின் மகன் உள்ளிட்ட குழுவினரால் ஆளும் தரப்பினருக்கு சார்பாக பிரசார கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் , இதில் ஜனாதிபதியும் கலந்துக்கொள்ளவுள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைவிடவும் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ சிறந்தவர் என்று மக்கள் நம்புகின்றனர். 

போதைப் பொருள் கடத்தலுக்கு எதிர்ப்பை தெரிவிப்பதாக காண்பித்துக் கொண்டு, அந்த கடத்தல் காரர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டங்களுக்கு தலைமைத்தாங்குதல் மிக கீழ்தரமான செயற்பாடாகும்.

இவ்வாறு செயற்படுவதால் மக்கள் கோதாபயவின் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். அதனால் இவ்வாறான கூட்டங்களை தவிர்ப்பதே மிகவும் சிறந்தது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31