யாழ். வைத்தியசாலை வீதியில் இன்று பகல் ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் குறித்த நபர் படுகாயமடைந்துள்ளார். 

இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தில் பனியாற்றும் 41 வயதுடைய ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

இவ்வாறு படுகாயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் மீது கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.