சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் தொழில்முனைவோர் ஒருவரை கொலை செய்த திட்டமிட்ட சந்தேகத்தின்பேரில் ரஷ்யாவின் தூர கிழக்கு பிராந்தியமான கபரோவ்ஸ்க் ஆளுனர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

செர்ஜி ஃபுர்கல் என்ற குறித்த ஆளுநர் 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் ஒரு கொலை முயற்சி மற்றும் வணிகர்களை கொலை செய்துள்ளதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்படுவதாக ரஷ்யாவின் உயர் மட்ட விசாரணை நிறுவனம் இன்று வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

ஃபுர்கல் அவரது வீட்டிற்கு வெளியே கைதுசெய்யப்பட்டதாக ரஷ்ய அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதுடன், கைதின்போது காவல் அதிகாரிகளால் அவர் இழுத்துச் செல்லப்படும் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.

கைதுசெய்யப்பட்ட 50 வயதான ஃபுர்கல் மேலதிக விசாரணைகளுக்காக தலைநகர் மொஸ்கோவிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.