பிறந்து பதின்மூன்று நாட்களேயான சிசுவொன்று தாய்ப்பால் தொண்டையில் அடைத்த நிலையில் மரணமானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொகவந்தலா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மோறா தோட்டத்தில் இன்று அதிகாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிறந்து 13 நாட்களேயான பெண் சிசுவுக்கு அதிகாலை மூன்று மணியளவில் தாய் பாலூட்டிவிட்டு தூங்க வைத்துள்ளார் .
பின்னர் காலை ஆறு மணியளவில் எவ்வித அசைவுகளும் இல்லாத நிலையில் குழந்தை இருப்பதை அவதானித்த தாய் உடனடியாக பொகவந்தலாவை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளார்.
வைத்தியர்களினால் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது குழந்தை மரணமானது தெரியவந்துள்ளது.
தாய் பால் தொன்டையில் அடைத்து குழந்தை மரணமாகியிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM