மஸ்கெலியா பிரதேசத்தை சூழ உள்ள தோட்டங்களில் இயங்கி வரும்  கடைகளில் சிலர் அதிகளவில் பொருட்களை விற்பனை செய்வதற்காக தோட்ட தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும், இவ்வாறு தோட்ட பகுதியில் இயங்கி வருகின்ற சில்லறை மற்றும் ஏனைய விற்பனை நிலையங்களில் அதிகளவு விலைக்கே பொருட்களை விற்பனை செய்து வருவதாகவும் எந்த விதமான கட்டுப்பாட்டு விலைக்கும் பொருட்களை விற்பனை செய்வதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் தோட்ட பகுதியில் இயங்கி வரும் இவ்வாறான கடைகள் பிரதேச சபைகளிலோ அல்லது பிரதேச செயலகத்திலோ பதிவு செய்யப்பட்டுள்ளதா என தெரியவில்லை என்றும் இவ்விடயம் தொடர்பாக நுவரெலியா மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் கவனம் செலுத்தி தோட்ட பகுதியில் இயங்கி வரும் கடைகளை திடீர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.