(இராஜதுரை ஹஷான்)

பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு   பெரும்பான்மை  ஆசனங்களை பெறுவது  சாத்தியமற்றது . விகிதாசார தேர்தல் முறைமையின்  கீழ் எந்த  கட்சியும் தனித்து பெரும்பான்மை ஆசனங்களை ஒருபோதும்   பெறாது.  

ஐ.தே.க அரசியல் ரீதியில் ...

இருப்பினும் பொதுஜன பெரமுனவே  அரசாங்கத்தை அமைக்கும் என  பொதுஜன பெரமுனவினவின் உறுப்பினர்  மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 தற்போது நடைமுறையில்  உள்ள தேர்தல்    முறைமை  ஆளும் தரப்பினருக்கு மாத்திரமல்ல, எதிர் தரப்பினருக்கும்  நெருக்கடியினை  ஏற்படுத்தியுள்ளது.  

விருப்பு வாக்கு முறைமை கட்சிகளின் உறுப்பினர்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளது.    அரசியல் கட்சிகளில்தற்போது எழுந்துள்ள முரண்பாடுளுக்கு விருப்பு வாக்கு  முறைமை  பிரதாக காரணியாக உள்ளது.

  விகிதாசார தேர்தல் முறைமையின் கீழ் பொதுஜன பெரமுன  மூன்றில் இரண்டு பெரும்பான்மையான ஆசனங்களை    பெறுவது சாத்தியமற்றது. அதாவது   மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்ற 150ற்கும் அதிகமான  ஆசனங்களை  தனித்து பெற வேண்டும்.  அவ்வாறாயின் 94 சதவீனமான  வாக்குகளை  பெற வேண்டும்.  இது  சாத்தியமற்றது.

 எவ்வாறு  இருப்பினும்    பொதுஜன பெரமுன 130 தொடக்கம் 135ற்கு வரையான ஆசனங்ளை  கைப்பற்றும். புதிய  அரசாங்கத்தை  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவே  அமைக்கும் என்பதில் எவ்வித மாற்றமும் கிடையாது. ஒரு கட்சி  பாராளுமன்றத்தில் தனித்து ஆட்சியமைக்க வேண்டுமாயின் முதலில்  நடைமுறையில்  உள்ள தேர்தல்    முறைமை  மாற்றியமைக்கப்பட  வேண்டும். என்றார்.