அறிமுக இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் தயாராகவிருக்கும் 'முருங்கக்காய் சிப்ஸ்' என்ற படத்தில் கதையின் நாயகனாக சாந்தனு பாக்யராஜ் நடிக்கிறார்.

லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகரன் தயாரிக்கவிருக்கும் புதிய திரைப்படம் 'முருங்கக்காய் சிப்ஸ்'. இந்தப்படத்தில் சாந்தனு பாக்கியராஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கிறார். 

இவர்களுடன் மூத்த நடிகர் கே பாக்யராஜ், மனோபாலா, மயில்சாமி ,ரோபோ ஷங்கர், ரேஷ்மா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். ரமேஷ் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, தரண் குமார் இசை அமைக்கிறார்

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரனின் பிறந்த நாளையொட்டி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியிருக்கிறது.