ஞாயிற்றுக்கிழமை சேவையிலிருந்து விலகுவதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொவிட்-19 நெருக்கடி மற்றும் பல பிரச்சினைகள் ஜனாதிபதி அறிவித்தபடி எந்தவித சலுகைகளையும் தாம் பெறாதமையினால் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை முதல் சேவையிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

அதாவது காப்பீட்டு கொடுப்பனவுகள் மற்றும் எரிபொருள் மானியம் ஆகியவற்றில் கோரப்பட்ட சலுகைகள் வழங்கப்படவில்லை. இதனால் தனியார் பஸ் உரிமையாளர்கள் தமது சேவையில் தொடர்வதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.